சென்னையில் இன்று நடைபெறும் உலக கோப்பை லீக் போட்டியை ஒட்டி சென்னை மெட்ரோ ரயில் சேவை நீடிக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.


சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் உலகக் கோப்பை கடந்த 5ம் தேதி தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நடைபெறும், 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில், தற்போது வரை 10 லீக்  போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அதில் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் தோல்வியையே சந்திக்காமல் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை ஆக்கிரமித்துள்ளன. இந்நிலையில், இன்றைய லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகள் மோத உள்ளன.


சென்னையில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ளது. போட்டியின் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, இன்றைய போட்டியிலும் வென்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய முனைப்பு காட்டுகிறது.


அதேநேரம், கடைசியாக விளையாடிய லீக் போட்டியில் தோல்வியுற்ற வங்கதேசம் அணி, இன்றைய போட்டியின் மூலம் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப தீவிரம் காட்டி வருகிறது. இதனால், இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என கருதப்படுகிறது.


இந்நிலையில் மக்கள் வசதிக்காக  மெட்ரோ ரயில் சேவை நீடிக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்,


”13ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடவுள்ள போட்டி, சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் அக்டோபர் 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி  சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.


அதன்படி, போட்டியினை பார்த்துவிட்டு திரும்பும் ரசிகர்களின் வசதிக்காக, மெட்ரோ இரயில் சேவை வழக்கத்தை விட கூடுதலாக ஒரு மணி நேரம், அதாவது, இரவு 12.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


மேலும், ரசிகர்கள், போட்டிக்கான டிக்கெட்டினை காண்பித்து எவ்வித கட்டணமும் இன்றி மெட்ரோ இரயிலில் பயணம் மேற்கொள்ளலாம். போட்டியை காண மைதானத்திற்கு செல்லும் போது, இச்சலுகை பொருந்தாது என்பதனையும் மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்துக் கொள்கிறது.


நீட்டிக்கப்பட்ட மெட்ரோ இரயில் சேவை:


நிலவழித்தடம்: பயணிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்து விமான நிலையம் மற்றும்  விம்கோ நகர் பணிமனை மெட்ரோ இரயில் நிலையம் நோக்கி இரயில்கள்  இயக்கப்படும்.


பச்சை வழித்தடம் : புரட்சி தலைவர் டாக்டர்.எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் இருந்து பரங்கிமலை மெட்ரோ இரயில் நிலையம் வரை 15 நிமிட இடைவெளியில் இரயில்கள் இயக்கப்படும். போட்டி நாளன்று (08.10.2023) இரவு 11.00 மணி முதல் 12.00 மணி வரை பச்சை  வழித்தடத்தில் இருந்து நீல வழித்தடம் மாறுவதற்கான இரயில் சேவை இயக்கப்படாது. உலக கோப்பை கிரிக்கெட் ரசிகர்கள், இதற்கேற்ப தங்களது பயணத்தினை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்”  என குறிப்பிடப்பட்டுள்ளது.  


NZ vs Ban World Cup: உலகக் கோப்பை - ஹாட்ரிக் வெற்றி பெறுமா நியூசிலாந்து? சென்னையில் வங்கதேசத்துடன் மோதல்