ஈஷா யோகா மையம் சார்பில் தமிழக சுகாதார துறைக்கு 4 லட்சம் கே.என் 95 முக கவசங்கள் அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் வழங்கப்பட்டது


கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஈஷா சார்பில் 4 லட்சம் கே.என் 95 முக கவசங்கள் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்களிடம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா மோகன் கலந்து கொண்டார். 


சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் முக கவசங்களை ஈஷா தன்னார்வலர்கள் அமைச்சரிடம் வழங்கினர். பின்னர் அவர் அவற்றை அனைத்து மாவட்ட சுகாதார துறையினருக்கும்  மக்கள் நல்வாழ்வுத்துறை பிரித்து வழங்கியது.


இந்த நிகழ்ச்சிக்குப் பின் இது தொடர்பாக அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “4 லட்சம் கே.என். 95 முக கவசங்களை தமிழ்நாடு சுகாதாரத் துறைக்கு ஈஷா அமைப்பினர் வழங்கி உள்ளார்கள். அந்த முக கவசங்கள் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்ட சுகாதார துறை இயக்குநர்களிடம் தலா 10 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 20 ஆயிரம் முக கவசங்கள் பொது சுகாதார துறைக்கு வழங்கப்பட உள்ளது. இவை வட்டார அளவிலான அரசு மருத்துவமனைகளுக்கு வருகை தரும் நோயாளிகள், பார்வையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்தார். 


இதற்கு முன்பு, ஈஷா சார்பில் கொரோனா முதல் அலையின் போதும் இதேபோல் முக கவசங்களும், ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளும் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதேபோல் தமிழ்நாடு முழுவதும் உள்ள தன்னார்வ அமைப்புகள் கொரோனா தொற்று முதல் அலையின் போதும், தமிழக அரசிற்கு முககவசங்கள் வழங்கியும், ஆதரவற்றவர்களுக்கு ஊரடங்கு காலத்தில் உணவு வழங்கியும் அரசின் பணியில் முடிந்த அளவில் உதவிக்கரங்களை நீட்டின. சென்னை மற்றும் கடலூர்  வெள்ளத்தில் மூழ்கிய போதும் தன்னார்வ அமைப்புகளின் பணி மிகவும் முக்கியமானது.  அதேபோல், இது போன்ற காலகட்டங்கள் மனிதத்தின் தேவையை உலகிற்கு உணர்த்திவிட்டுச் செல்கிறது, மனிதர்கள் தான் அதனை விட்டுவிட்டுச் செல்கிறோம் என விழாவில் கலந்துகொண்ட தன்னார்வ அமைப்பினைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.