தமிழக கடலோர பாதுகாப்பு ஏ.டி.ஜி.பி.யாக பொறுப்பு வகிப்பவர் சந்தீப் மிட்டல். மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். அவரது ட்விட்டர் பதிவில் இப்போது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது.




அமெரிக்காவின் வானியல் ஆராய்ச்சி நிறுவனமான நாசா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், விண்வெளியில் கேட்கப்படும் ஒலியை பதிவிட்டுள்ளது. மேலும், விண்வெளியில் நிலவும் ஒலி அதாவது சத்தம் தொடர்பாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.






இந்த நிலையில், அந்த ட்விட்டர் பதிவை டேக் செய்த ஏ.டி.ஜி.பி. சந்தீப் மிட்டல் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த ஒலிக்கு நமது முனிவர்கள் ஓம் என்று பெயரிட்டுள்ளனர். பிரபஞ்சத்தின் வருகையும் அதன் முடிவும் ஓம். இந்த ஒலி உலகின் முடிவை கொண்டுவரும் திறன் கொண்டது. இந்த ஒலி உயிரினம், கிரகம் என எதையும் விட அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நம்பிக்கை என்று இதை சொன்னாலும், நாசா அதை அறிவியல் என்று சொல்கிறது”  என்று பதிவிட்டுள்ளார்.






இந்தியாவின் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளில் ஒருவராகவும், நாட்டில் பல்வேறு இடங்களில் காவல்துறையின் உயர் பொறுப்பை வகித்தவருமான காவல்துறையின் ஏ.டி.ஜி.பி. இவ்வாறு பதிவிட்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவரது பதிவிற்கு கீழ் பலரும் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.


சிலர் ஓம் சத்தத்திற்கும், நாசா வௌியிட்டுள்ள சத்தத்திற்கும் வித்தியாசம் இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர். ஜெசி ஜெட் என்ற ட்விட்டர்வாசி, மதம் என்பது நம்பிக்கையின் கலாச்சாரம். அறிவியல் என்பது சந்தேகத்தின் கலாச்சாரம். இரண்டையும் ஒருபோதும் இணைக்க முடியாது என்று கருத்து தெரிவித்துள்ளார்.


மற்றொரு ட்விட்டர்வாசி, நாசாவிடம் ஆதாரம் உள்ளது. ஓம் ஒலியை கண்டுபிடிக்க முடியவில்லை. அறிவியலும், மதமும் வேறுபடுத்தப்படட்டும் என்று பதிவிட்டுள்ளார்.


மேலும் படிக்க : Anna University Results: பொறியியல் மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள்: வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம் - பார்ப்பது எப்படி?


மேலும் படிக்க : Crime: "ஏரியாவில் யார் பெரிய ரவுடி" - பழிக்கு பழி அரங்கேறிய இரட்டை கொலை.. முழு பின்னணி...?