தீபாவளி வந்தாலே பட்டாசு, மத்தாப்பு, கொண்டாட்டம், கோலாகலம் தான். கொரோனா காலகட்டத்தில் உலகமே, ஊரே அடங்கியிருந்த நிலையிலும் கொண்டாடி தீர்த்தவர்கள் தானே நாம். கொரோனா கட்டுக்குள் வந்துள்ள இந்த ஆண்டும் தீபாவளியை வேறு லெவல் செய்ய பலரும் காத்திருக்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தயாரித்த பட்டாசுகளை விற்பனை செய்வதே பெரிய சவாலாக இருந்த சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள், இந்த முறை கொஞ்சம் மூச்சு விட்டு வெளியே வந்துள்ளனர். 


அதன் காரணமாக புதிய ரக பட்டாசுகளை அவர்களை அறிமுகம் செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது சிவகாசியில் இருந்த இறக்குமதியாகிறது ‛டின் பீர்’ பட்டாசுகள். தீபாவளியில் டாஸ்மாக் விற்பனை வேறு ரகத்தில் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இளைஞர்களை கவருவதற்காக சிந்தித்த சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள், இம்முறை டின் பீர் பட்டாசை இறக்கியுள்ளனர். இதை குடிக்க முடியாது... ஆனால் வெடிக்கலாம். பார்க்க அப்படியே ஒரிஜினல் டின் பீர் மாதிரியே உள்ள இந்த பட்டாசுகள், முன்னணி பிராண்டுகளின் தோற்றத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. 




டின் பீர் குடித்து தீபாவளி நாளில் வெடித்து சிதறுவதற்கு பதிலாக, டின் பீர் வெடிகளை வெடித்து சிதறவிடுங்கள் என்று யார் ஐடியா கொடுத்தார்களோ தெரியவில்லை. ஆனால் அனைவரையும் கவரும் ஐடியாவாக அது மாறிவிட்டது. அறிமுகமான மாத்திரத்தில் டின் பீர் வெடி விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. சரி... அப்படி என்ன செய்யும் இந்த டின் பீர் வெடி...?


டின் பீர் குடித்தால் எப்படி போதை உச்சிக்கு ஏறுமோ... அதை போன்று இந்த டின் பீர் வெடியை பற்ற வைத்தால், 15 அடி வரை உயரே சென்று பச்சை, மஞ்சள், சிவப்பு வண்ணங்களில் மத்தாப்பாய் மின்னும். கண்டிப்பாக இந்த வெடி இந்த வருட தீபாவளியை வேறு லெவலுக்கு கொண்டு செல்லப் போகிறது. அது ஒருபுறம் இருந்தாலும், மது போதையில் வெடி எது, பீர் எது என தெரியாமல், சில குறும்பு மதுப்பிரியர்கள் தவறாக இதை கையாளாதபடி பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்: