அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது. 


சட்ட விரோத, பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கில் அமலாக்கத்துறை விசாரிக்க இடைக்காலத்தடை விதிக்கப்பட்டுள்ளது. 2001ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை விசாராணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத்தடை விதிதுள்ளது. 


இதற்கு முன்னதாக இந்த வழக்கில், 


கடந்த 2002-2006ம் ஆண்டில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புதுறை கடந்த 2006ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. 

 

இந்நிலையில்,  சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த அமலாக்கப் பிரிவு, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தியது.  மேலும், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 6 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகளை கடந்த பிப்ரவரி மாதம் முடக்கியது. 

 

குற்றப்பத்திரிகை..

 

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது அமலாக்கத்துறை கடந்த ஏப்ரல் மாதம் குற்றப்பத்திரிகை பதிவு செய்தது. 2001 - 2006 காலகட்டத்தில் அதிமுக தலைமையிலான அமைச்சரவையில் கால்நடை மற்றும் வீட்டு வசதி, நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் பதவி வகித்தபோது வருமானத்துக்கு அதிகமாக 4 கோடியே 90 இலட்சம் அளவிற்கு சொத்து சேர்த்த புகாரில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தது. குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட்டதால் அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படவும் வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்பட்டுவந்தது.

 

சொத்துகளை முடக்கியதற்கு எதிராகவும், தனக்கு எதிராக அமலாக்கப் பிரிவு பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரியும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.  இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அமலாக்கதுறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.

 

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், சி.வி.கார்த்திகேயன் அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது குறித்து அமலாக்கதுறை தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கின் விசாரணையை தொடர அனுமதி அளிக்க வேண்டும் என அமலாக்கதுறை சார்பாக வாதிடப்பட்டது. 

மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், அமலாக்கத்துறை விசாராணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத்தடை விதிதுள்ளது.