வீட்டில் செல்லப்பிராணிகளாக நாய்கள்

நவநாகரீக காலத்தில் வீடுகளில் செல்லப்பிராணிகள் வளர்க்கப்படுவது அதிகரித்து வருகிறது. அதிலும்  நாய், பூனை என ஆசையாக வளர்த்து வரும் நிலையில், அதில் கொடூர குணங்களை கொண்ட நாய்களையும் ஒரு சிலர் கெத்துக்காக வளர்ப்பதால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. நாய்களின் தாக்குதலால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பாதிக்கப்படும் நிலை தொடர்ந்து வருவதால் அடுத்தடுத்து புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.  இதனையடுத்து நாய்களுக்கு உரிமம் தொடர்பாக ஒவ்வொரு மாநகராட்சியிலும் பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டது.

Continues below advertisement

அந்த வகையில் சென்னையில் பல்வேறு நாட்களில் நடைபெற்ற முகாம்கள் மூலம்  57,602 வளா்ப்பு நாய்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டது. மேலும் உரிமம் பெறாத வளா்ப்பு நாய்களுக்கு அபராதம் விதிக்கவும் 15 குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. 

கொடூர குணங்களை கொண்ட பிட்புல்,ராட்வீலர்

இந்த நிலையில் மனிதர்களை நாய்கள் தாக்கும் சம்பவத்தில்   பிட்புல் (PIT BULL) மற்றும் ராட்வீலர் (ROTTWEILLER) இன நாய்கள் தான் பெருமளவு ஈடுபட்டுள்ளது. எனவே ஆக்ரோஷமான குணநலன்களால் அதிகளவு பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த நாய்கள் வளர்ப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட வளர்ப்பு நாய்களின் உரிமையாளர்களுக்கு உரிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொது மக்களுக்கு அச்சமூட்டும் வகையில் ஆக்ரோஷமான தன்மை கொண்ட வளர்ப்பு நாய் இனங்களான பிட்புல் (PIT BULL) மற்றும் ராட் (ROTTWEILLER) நாய் இனங்களை சென்னை மாநகராட்சி எல்லைக்குட்ட பகுதிகளில் வளர்ப்பதற்கு தடை விதிக்க இன்று நடைபெற்ற சென்னை மாநகராட்சி கூடத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது

Continues below advertisement

நாளை முதல் ரூ. ஒரு லட்சம் அபராதம்

எனவே நாளை (20.12.2025) முதல் பிட்புல் (PIT BULL) மற்றும் ராட்வீலர் (ROTTWEILLER இன நாய்களை செல்லப்பிராணிகளின் உரிமம் பெற விண்ணப்பிப்பதற்கு தடை விதிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் உரிமத்தை புதுப்பிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.  ஏற்கனவே உரிமம் பெற்ற பிட்புல் (PIT BULL) மற்றும் ராட்வீலர் (ROTTWEILLER) இன வளர்ப்பு நாய்களை வீட்டிற்கு வெளியே அழைத்து செல்லும் போது அவற்றிற்கு கழுத்துப்பட்டை (Leashing) மற்றும் வாய்க்கவசம் (Muzzling) அணிவிப்பதை கட்டாயம் ஆக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதனை பின்பற்றாத உரிமையாளர்களுக்கு 5,000 ரூபாய்  அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் உரிமமின்றி சட்ட விரோதமாக பிட்புல் (PIT BULL) மற்றும் ராட்வீல VEILLER) நாய் இனங்களை புதிதாக வாங்கி வளர்ப்பவர்களுக்கு ரூ.1,00,000  அபராதம் விதிக்கவும் சென்னை மாநாகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.