சென்னை ; வாட்ஸ் அப் மூலம் விளம்பரத்தை பார்த்து ரூ. 28 லட்சத்தை இழந்த நபர் !! எப்படி தெரியுமா ?
சென்னை ஆவடி பருத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ஜாகீர் உசைன் ( வயது 42 ) கடந்த ஆகஸ்ட் 17 - ம் தேதி வாட் ஸாப் விளம்பரத்தை பார்த்து மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொண்டார். இவருடன் பேசிய நபர்கள் ஆன்லைன் வர்த்தகம் செய்தால் , அதிக லாபம் கிடைக்கும் என மர்ம நபர்கள் ஆசை காட்டியுள்ளனர். எட்டு தவணையில், 28.70 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார்.
பின், கமிஷன் முதலீடு தொகையை எடுக்க முயன்ற போது முடியவில்லை. இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜாகீர் உசைன் ஆவடி மத்திய குற்றப் பிரிவில், டிசம்பர் 1ல் புகார் அளித்தார். புகாரை விசாரித்த இன்ஸ்பெக்டர் அசோக் குமார் தலைமையிலான தனிப்படை போலீசார், மோசடி நபர்களுக்கு போலியான வங்கி கணக்கு தயார் செய்து கொடுத்த, ஆவடியைச் சேர்ந்த பால கிருஷ்ணன் ( வயது 46 ) கொளத்தூரைச் சேர்ந்த விஜயா ( வயது 62 ) அண்ணனுாரைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பிரசாத் குமார் ( வயது 33 ) ஆகியோரை கைது செய்தனர்.
இந்நிலையில் மோசடி நபர்களுக்கு வங்கி கணக்குகளை கொடுத்து கமிஷன் பெற்று, தரகராக செயல்பட்ட வளசரவாக்கத்தைச் சேர்ந்த அப்துல் முஜீப் மைலான்சிகள் ( வயது 56 ) திருப்பூரைச் சேர்ந்த கண்ணன், ( வயது 53 ) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து மூன்று மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
போலி ஆவணம் மூலம் இந்திய பாஸ் போர்ட் பெற்று , வெளி நாடு செல்ல முயன்ற வங்க தேசம் மற்றும் இலங்கை நாடுகளை சேர்ந்த இருவர் கைது.
சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் படி வங்கதேசத்தை சேர்ந்த முகமது அல்அமீன், இலங்கையை சேர்ந்த பிரியதர்ஷினி சத்தியசிவம் ( வயது 26 ) ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனர். போலி ஆவணங்கள் வாயிலாக இந்திய பாஸ்போர்ட் பெற்று வெளிநாடு தப்ப முயன்றது தெரிய வந்தது. இருவரையும் , மத்திய குற்றப்பிரிவு போலீசார், போலி பாஸ்போர்ட் புலனாய்வு பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்ததில், முகமது அல் அமீன் என்பவர், 2011 - ம் ஆண்டு சட்ட விரோதமாக, வங்கதேச எல்லை வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தது தெரிய வந்தது. பின், போலி ஆவணங்கள் வாயிலாக, அல் அமீன் மண்டல் என்ற பெயரில், இந்திய பாஸ்போர்ட் பெற்று ஐக்கிய அரபு நாட்டிற்கு தப்ப முயன்றது தெரிய வந்தது.
அதே போல் இலங்கையை சேர்ந்த பிரியதர்ஷினி சத்தியசிவம் ( வயது 25 ) என்பவர், 2024 - ம் ஆண்டு சுற்றுலா விசா மூலம் இந்தியா வந்து திருச்சியைச் சேர்ந்த ரவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின் போலியான ஆவணங்கள் வாயிலாக இந்திய பாஸ்போர்ட் பெற்று இலங்கை செல்ல முயன்றது தெரிய வந்தது இருவரையும் போலீசார் கைது செய்தனர்.