சுதந்திர தினத்தை ஒட்டி ஆழ்கடலில் பட்டொளி வீசிய தேசியக் கொடியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


200 ஆண்டுகளாக ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு இருந்த இந்தியா, 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரம் பெற்றது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் கோலாகலமாக சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், செங்கோட்டை, இந்திய எல்லை, மாநில நினைவுச்சின்னங்கள் என அனைத்து பகுதிகளிலும் மூவர்ண கொடியேற்றப்பட்ட நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. 


டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். காலை 7.30 மணியளவில் நடைபெற்ற நிகழ்வில் உள்நாட்டு மக்களும், அரசியல் தலைவர்களும், முக்கிய பிரபலங்களும், சிறப்பு விருந்தினர்களும் பங்கேற்றனர். கொடியேற்ற நிகழ்வின்போது, ஹெலிகாப்டர்கள் மலர்களை தூவி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தின. 


இதேபோன்று வாகா எல்லை, குளிர்பிரதேசத்தின் எல்லை உள்ளிட்ட பகுதிகளில் ராணுவ வீரர்கள் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர். நாட்டு மக்களும், திரை பிரபலங்களும் தங்களின் இல்லத்தில் தேசிய கொடியை ஏற்றி வாழ்த்து கூறினர். வானத்தில் பட்டொளி வீசி பறந்த தேசியக் கொடி கடலுக்கு அடியிலும் ஏற்றப்பட்டது. 










ஆழ்கடலில் தேசியக் கொடியை இந்திய கப்பல்படை பறக்கவிட்டது. கவரட்டி தீவில் ஆழ்கடலில் தேசிய கொடியுடன் சென்ற வீரர்கள், மூவர்ண கொடியை பறக்கவிட்டு சல்யூட் அடித்து வாழ்த்து கூறினர். இதேபோல், ராமேஸ்வரத்தில் உள்ள ஆழ்கடலிலும் தேசியக்கொடி பறக்கவிடப்பட்டது.


மேலும் படிக்க: Independence Day 2023 Wishes: கோலாகல சுதந்திர தின கொண்டாட்டம்: வாழ்த்துகள், கவிதைகள், ஸ்டேட்டஸ்கள் இங்கே!