Independence Day 2023 Wishes in Tamil: நாட்டின் 77வது சுதந்திர தினம் நாளை நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. 


மன்னராட்சியால் சிதறிக்கிடந்த சிறு சிறு நாடுகளை தன் ராணுவ பலத்தால், வெள்ளையர்கள் ஒருங்கிணைத்து ஆட்சி செய்து வந்தனர். கி.பி 1800ஆம் ஆண்டு காலத்தில் தென் தமிழ்நாட்டில் மருது சகோதரர்களால் எதிர்க்கப்பட்டது தொடங்கி 1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் வரை வெள்ளையரின் ஆட்சிக்கட்டுப்பாட்டில் இருந்த இப்போதைய இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் என ஒருங்கிணைந்த நிலப்பரப்பில் இருந்த பல்வேறு வீரர்கள், தலைவர்கள், பொதுமக்கள் என எண்ணற்றவர்களின் தியாகத்தாலும், போராட்டத்தாலும் 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. 




அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது. அரசு அலுவலகங்களில், கல்வி நிலையங்கள் உட்பட நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் கொண்டாட பல்வேறு ஏற்பாடுகளை மத்திய மாநில அரசுகள் மிக தீவிரமாக ஏற்பாடு செய்து வருகின்றது. அதேபோல், நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 




டிஜிட்டல் உலகம் வளர்ந்து விட்டதால் பெரும்பாலானோர் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவிப்பதும், தங்களது வாட்ஸ்-அப் செயலிகளில் ஸ்டேட்டஸ் வைப்பதும், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்றவற்றில் ஸ்டோரியாக பதிவு செய்து தங்களது வாழ்த்துகளையும், மகிழ்ச்சிகளையும் வெளிப்படுத்துவர். அவ்வகையில் உங்கள் நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு, மதிப்பிற்குரியவர்களுக்கு சமூக வலைதளத்தில் வாழ்த்துவதற்கான பல்வேறு இமேஜ்களை இங்கு காணலாம். 




தேசம் மீது நேசம் கொண்ட அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள் என்ற வாசகத்தை ஏந்தி உள்ளது இந்த இமேஜ். 




இந்த இமேஜில் ‘தியாகிகளின் வீர முழக்கத்துல் பிறந்தது நம் இந்திய தேசம்! இந்திய சுதந்திர தினம் வாழியவே! சுதந்திர தின நல்வாழ்த்துகள்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. 




 


இந்த படத்தில், பாரதியாரின், ’பாருக்குள்ளே நல்ல நாடாம் எங்கள் பாரத நாட்டின் சுதந்திர தின வாழ்த்துகள்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. 


 






இந்த படத்தில் இந்திய நாட்டின் மீது பற்றுடைய அனைத்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துகள் என குறிப்பிடப்பட்டுள்ளது. 



இந்த படத்தில், ‘ இனிப்பான இந்த நாளில் ஒரு தாயின் பிள்ளைகளாக நாம் எல்லோரும் சுதந்திர தினத்தை போற்றி மகிழ்வோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது போல் இன்னும் பல இமேஜ்கள் தற்போது சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.




அப்பறம் என்ன நீங்களும் உங்க சமூக வலைதளத்தில் இதுபோன்ற இமேஜ்களை பகிர்ந்து உங்களின் வாழ்த்துகளை உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு கூறுங்கள்.