பாகிஸ்தான் ராணுவம் மீது இந்தியா தாக்குதல் நடத்தவில்லை எனவும், தீவிரவாதிகள் மீது மட்டுமே இந்தியா குறி வைத்து தாக்குதல் நடத்தியது என இந்தியா தெரிவித்து வந்த நிலையில், இந்தியா மீது பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வந்தது. இந்தநிலையில், தான் பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும் வகையில், தாக்குதலை இந்தியா தீவிரப் படுத்தியுள்ளது. 

இந்திய அதிரடி நடவடிக்கை

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய பாதுகாப்பு படை நேற்று தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 இடங்களில் தீவிரவாத நிலைகள் மீது இந்திய நடத்திய தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் 

இந்தியா தீவிரவாதிகள் மீது மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்திய நிலையில், இந்தியா எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வந்தது. இதேபோன்று குடியிருப்பு பகுதிகளிலும் ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அனைத்தையும் இந்தியா ராணுவம் மற்றும் விமானப்படை இணைந்து தகர்த்தெறிந்தது. 

கராச்சி துறைமுகம் மீது தாக்குதல் ?

இந்தியா தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு, தற்காப்பு தாக்குதலில் மட்டுமே நடத்தி வந்தது. இந்தநிலையில் பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்த தொடங்கியதை தொடர்ந்து, பாகிஸ்தானில்  உள்ள முக்கிய நகரங்களின் மீது, ராணுவத்தை குறிவைத்து இந்தியா தாக்குதலை தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இந்தநிலையில் இந்திய கடற்படை , பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியை குறிவைத்து, தாக்குதலை தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக கராச்சி துறைமுகத்தின் மீது இந்திய கடற்படை தாக்குதலில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே இந்திய விமானப்படையும், தாக்குதலை தொடங்கி இருக்கும் நிலையில், இந்தியா கடல் படையும் களத்தில் இறங்கியுள்ளது.