கரூரில், போலி பான்கார்டு /போலி ஆதார் கார்டு தயாரித்து கொடுத்த பெண் உட்பட 6 பேரை கோவை, பயங்கரவாத எதிர்ப்புப் படை காவல்துறை கைது செய்து கரூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தது.

கரூர் மாவட்டத்தில் போலியாக பான்கார்டு, ஆதார் கார்டு தயாரித்து கொடுப்பதாக கிடைத்த தகவலின்  சிறப்பு ஆதாரங்களின் அடிப்படையில் கோவையில் செயல்படும், பயங்கரவாத எதிர்ப்புப் படை காவல்துறை கண்காணிப்பாளர்  பத்ரிநாராயணன் ஐபிஎஸ், ஒரு சிறப்பு குழுவை அமைத்து போலி பான் மற்றும் போலி ஆதார் உருவாக்கும் குழுவை கண்டுபிடித்தனர்.

 

கரூர் மாநகரப் பகுதியில் ஜெராக்ஸ் கடையில் வைத்திருந்த போலியாக ஆதார், பான்கார்டு தயாரித்து கொடுத்த  ஜெயக்குமார், கார்த்திக்,  நவீன்சேகர், சம்பத், சீனிவாசன் மற்றும் கலைவாணி ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 130 பான்  கார்டுகள், 69 சேர்க்கை படிவங்கள், ஒரு மடிக்கணினி மற்றும் 6 மொபைல் போன்கள் மற்றும் பான் கார்டுகளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பிற சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

 

குறிப்பாக 130 பான்கார்ட் பறிமுதல் செய்யப்பட்டதில் அதிகளவு இஸ்லாமியர்கள் பெயர்கள் இருந்ததால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. போலியாக பேன் ஆதார் கார்டு தயாரித்துக் கொடுத்த குற்றவாளிகளை கரூர் நகர காவல் நிலையத்தில், பயங்கரவாத எதிர்ப்பு படை காவல் துறையினர் ஒப்படைத்துச் சென்றனர். தொடர்ந்து நகர காவல் துறையினர் ஆறு பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.