Covid : கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், மருத்துவமனைக்கு வருவோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.
நாட்டில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளுக்கு வருவோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு வருவோர் நாளை முதல் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.
அதிகரிக்கும் கொரோனா
கடந்த 2020ஆம் ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை நிலைகுலைய வைத்தது. சுகாதார ரீதியாக மட்டும் இன்றி பொருளாதார ரீதியாகவும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியது. இதை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் தவித்த நிலையில், விஞ்ஞான உலகின் தொடர் முயற்சியின் காரணமாக பெருந்தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இருப்பினும், பல்வேறு வைரசுகள் உருவாகி மக்களை தொடர்ந்து அச்சுறுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில், இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 3,095 பேருக்கு புதியதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது நேற்றைய விட 40 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 1,390 பேர் கடந்த 24 மணி நேரத்தில் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 4.41 கோடி பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு, அதில் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி விகிதம் 2.61 சதவிகிதமாக உள்ளது. பாதிப்புக்குள்ளானர்களின் வார விகிதம் 1.91 சதவிகிதமாக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4.47 கோடியாக உள்ளது.
இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை:
இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 867ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பிற்கு 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை, 92.15 கோடி முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை, 220.65 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முகக் கவசம் கட்டாயம்
இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளுக்கு வருவோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு வருவோர் நாளை முதல் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். தற்போது தமிழ்நாட்டில் தினசரி பாதிப்பானது 100-ஐ கடந்துள்ள நிலையில், மருத்துவமனைகளில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க