இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின், அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு சட்டப்பேரவையில் விளையாட்டுத்துறை அமைச்சராக மானியக்கோரிக்கையில் உரையாற்றினார்.


அப்போது, ஊரக இளைஞர்களுக்கான திறன் பயிற்சி-மகளிர் சுய உதவி குழுவினருக்கு புத்தாக்க பயிற்சி - கொத்தடிமை தொழிலாளர் மறுவாழ்வு - மதிப்புக்கூட்டப்பட்ட சுய உதவிக்குழு பொருள் அங்காடிகள் என சுமார் ரூ.385 கோடி மதிப்பில் 19 புதிய அறிவிப்புகளை மானிய கோரிக்கை மீதான பதிலுரையின் போது தெரிவித்தார்.


I am a proud representative of our CM stalin 's Dravidian Model Government என்ற பெருமிதமிக்க பொறுப்போடு ஊரகக்கடன்கள் & வறுமை ஒழிப்புத்திட்டங்கள் துறையின் மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று துறையின் சாதனைகள் - திட்டங்களை பதிலுரையாக வழங்கினேன் என தெரிவித்தார்.


19 புதிய அறிவிப்புகள்:


1.45,000 கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி 145 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும். திறன் பயிற்சியானது கிராமப்புற இளைஞர்களின் திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்பு பெறுவதற்கான தகுதியை உருவாக்கி வேலை வாய்ப்புகளை உறுதி செய்கிறது
இந்த ஆண்டு 20,000 கிராமப்புற இளைஞர்களுக்கு 120 கோடி ரூபாய் செலவில் திறன் பயிற்சி வழங்கப்படும்.


மேலும் சுய தொழிலை ஊக்குவிக்கும் வகையில் 25,000 இளைஞர்களுக்கு திறன் பயிற்சி 25 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும். 25.000 சுய உதவிக்குழுக்களுக்கு 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்படும். சுய உதவிக் குழுக்கள் மற்றும் அதன் உறுப்பினர்களின் தொழில் நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக சமுதாய முதலீட்டு நிதியை பொருளாதார கடன் உதவியாக வழங்கப்படும். இந்த ஆண்டு 5,000 அய உதவிக் குழுக்களுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வீதம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் மூலமாக சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்படும். இதற்காக மொத்த தொகை 75 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.


3. சுய உதவிக் குழுக்களால் நடத்தப்படும் 7,500 நுண் மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் 50 கேரடி ரூபாய் செலவில் வலுப்படுத்தப்படும்.


சுய உதவிக் குழு மகளிரால் நடத்தப்படும் தொழில் நிறுவனங்கள் பெறுவதில் புதிய தொழில் நுட்பங்களை மேற்கொள்வதில், விதிமுறைகளை கடைபிடித்தல் மற்றும் டிஜிட்டல் தளங்களில் விற்பனை செய்வதில் சிரமங்களை எதிர்கொள்கின்றன. சுய உதவிக் குழு பெண்களால் நடத்தப்படும் 7,500 நுண் மற்றும் குறு தொழில்கள் அடையாளம் காணப்பட்டு. அவர்களின் நிதி மற்றும் இதர தேவைகளின் அடிப்படையில் உதவிகள் வழங்கப்படும் இதற்காக வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மற்றும் தமிழ்நாடு -மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்


4. 1,000 கிராம ஸ்மாட் சிட்டிகளில் உள்ள மகளிர் புதிய தொழில் தொடங்குவதற்கும் ஏற்கனவே உள்ள தொழிலை மேம்படுத்துவதற்கும் நுண் தொழில் நிறுவனங்களுக்கான நிதி திட்டம் (Nano Enterprise Financing Fupd) 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.


வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஊரக மகளிருக்கு தொழில் தொடங்குவதற்கு பல்வேறு உதவிகள் புரிந்து வருகிறது இந்த ஆண்டு மகளிர் புதிதாக தொழில் தொடங்குவதற்கும். ஏற்கனவே செய்து வரும் தொழிலை விரிவுபடுத்துவதற்கும் 1,000 கிராம ஊராட்சிகளில், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் மூலம் நுண் தொழில் நிறுவனங்களுக்கான நிதி திட்டம் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்


“ஊரகப் பகுதிகளில் 10,000 சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு, 15 கோடி ரூபாய் சுழல் நிதி வழங்கப்படும்.


மகளிர், ஏழைகள் மற்றும் நலிவுற்றோர் சமூக பொருளாதார மேம்பாடு அடைய சுய உதவிக் குழுக்கள் சிறந்த அமைப்பாக உருவாகி உள்ளது. இவர்கள் அரசின் பல்வேறு திட்டங்களின் மூலம் பயன்களையும் அடைந்துள்ளார்கள். இந்த ஆண்டு. மக்கள் நிலை ஆய்வு பட்டியலில் விடுபட்ட மகளிர் குடும்பங்களைக் கொண்டு 10000 புதிய சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்படும் புதிதாக உருவாக்கப்படும் குழுக்களுக்கு கழல் நிதியாக 15,000 ரூபாய் வீதம் மொத்தம் 15 கோடி ரூபாய் வழங்கப்படும்.
6 அனைத்து மாவட்டங்களிலும் உள்ளூர் வல்லுநர்களை கொண்டு ஊரக இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க 1,000 புதிய சமுதாய திறன் பள்ளிகள் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.


உள்ளூர் மற்றும் பாரம்பரிய தொழிலில் ஈடுபட்டுள்ள செயல் வல்லுநர்கள் நிபுணர்களை கண்டறிந்து அவர்களின் மூலம் அதே கிராமத்தில் வட்டாரத்தில் சமுதாய திறன் பள்ளிகளை, அமைத்து, ஊதிய வேலைவாய்ப்பு மற்றும் சுய தொழில் தொடங்குவதற்கு ஆர்வமுள்ள இளைஞர்களை கண்டறிந்து தொழிற்பயிற்சிகள் அளிக்க ஒவ்வொரு சமுதாய திறன் பள்ளிக்கும் 70 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும். நடப்பாண்டில் அனைத்து மாவட்டங்களிலும் 1,000 புதிய சமுதாய திறன் பள்ளிகள் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்


7 ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து சுய உதவிக் குழுக்களுக்கும் 9 கோடியே 48 லட்சம் ரூபாய் செலவில் புத்தாக்கப் பயிற்சி வழங்கப்படும்.


சுய உதவிக் குழு உறுப்பினர்களின் தகுதி மற்றும் திறமையை மேம்படுத்த அடிப்படை பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு நிர்வாகம் நிதி மேலாண்மை மற்றும் தலைமைப்பண்பு ஆகியவற்றில் மகளிர் குழுக்களுக்கு சிறப்பு புத்தாக்கப் பயிற்சி 9 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும். இத்துடன் அரசின் பல்வேறு திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படும்.


8. மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களின் மறுவாழ்வுக்காக பொருளாதார கூட்டமைப்புகள் 7 கோடியே 34 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்படும்.


கொத்தடிமையாக இருந்து விடுவிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ளவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்காக சிறப்பு சுய உதவி குழுக்கள் அமைக்கப்பட்டு, அவர்கள் ஏற்கெனவே கூலி தொழிலாளர்களாக ஈடுபட்டிருந்த அதே தொழில்களில் தொழில் முனைவோர்களாக உருவாக்க கோடியே 34 லட்சம் ரூபாய் செலவில் பொருளாதார கூட்டமைப்புகள் அமைக்கப்படும்.


9 100 முக்கிய சுற்றுலா தலங்களில் சுய உதவிக் குழுக்களின் பொருட்களை விற்பனை செய்ய காட்சிப்படுத்த மதி அங்காடிகள்' 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். 
சுய உதவிக் குழுக்களின் பாரம்பரிய மற்றும் தனித்துவமான பொருட்களை சுற்றுவர் தலங்களுக்கு வரும் தேசிய மற்றும் சர்வதேச சுற்றுலா பயணிகள் வாங்குவதற்கு ஏதுவாக மாநிலத்தின் 100 முக்கிய சுற்றுலா தலங்களில் 'மதி அங்காடிகள்' 5 கோடி ரூபாய் செல்லில் அமைக்கப்படும்


10, 'ஒரு வட்டாரம் ஒரு உற்பத்தி பொருள்' (One Block One Product) எனும் திட்டம் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை மதிப்பு கூட்டி, சந்தைப்படுத்த எதுவாக பொது சேவை மையம் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.