இந்தியத் திருநாட்டின் 2023 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் அனைவரிடமும் சமத்துவம் நிலவும் வகையில் சமாதானப் புறாக்களையும், தேசிய கொடி வண்ணத்திலான பலூன்களையும பறக்கவிட்டார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் முன்னிலை வகித்தார்கள்.


 




காவல்துறை, தீயணைப்புத்துறை, வனத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மாநகராட்சி, நகராட்சிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, இல்லம் தேடி கல்வி, பொதுப்பணித்துறை, எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளை சார்ந்த 225 நபர்களை பாராட்டி நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கி கௌரவித்தார்.




 


வருவாய்த்துறையின் சார்பில் வீட்டுமனைப் பட்டா 4 நபர்களுக்கும், சமூக பாதுகாப்புத் திட்ட உதவித்தொகை 08 நபர்களுக்கும், 2 நபர்களுக்கும் பட்டா மாறுல் உத்தரவுகளும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 5 நபர்களுக்கும், மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் நீட்ஸ் திட்டத்தின் சார்பில் 2 நபர்களுக்கும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் 2 நபர்களுக்கு இணை மானியம், வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் 2 நபர்களுக்கும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பாக 01 நபருக்கு காளான் வளர்ப்பு குடில் அமைக்கவும், வேளாண் பொறியியல் துறை சார்பாக 2 நபர்களுக்கும், சமுக நலத்துறை சார்பாக முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் 2 நபர்களுக்கும், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் கல்வி கடன் உதவி 2 நபர்களுக்கும், சமுக பாதுகாப்புத்திட்டம் நிதி ஆதரவு திட்டத்தில் 2 நபர்களுக்கும்  என மொத்தம் 34 நபர்களுக்கு ரூ.92,98,820  மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


 




 


2023 – ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் கரூர் இசைப்பள்ளி, புலியூர் ராணி மெய்யம்மை அரசு உதவி பெறும் பள்ளி, நரிக்கட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அன்பாலயம் காது கேளாதோர் பள்ளி, கரூர் வெற்றி விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பரணி பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீ சாரதா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வெள்ளியணை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கரூர் சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, ராயனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கரூர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் உள்ள மாணவர் மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்தக் கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.