தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
16.08.2023 முதல் 20.08.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
15.08.2023 (சுதந்திர தினம்): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
அதியார் (மதுரை மாவட்டம்) 7, வாலாஜாபாத் (காஞ்சிபுரம் மாவட்டம்) 6, திருமங்கலம் (மதுரை மாவட்டம்), கலவாய் பொதுப்பணித்துறை (இராணிப்பேட்டை மாவட்டம்), காட்டுக்குப்பம் ஆர்க் (காஞ்சிபுரம் மாவட்டம்), காட்பாடி (வேலூர் மாவட்டம்), மேட்டுப்பட்டி (மதுரை மாவட்டம்) தலா 5, செஞ்சி (விழுப்புரம் மாவட்டம்), தாம்பரம் (செங்கல்பட்டு மாவட்டம்), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர் மாவட்டம்), திருத்தணி (திருவள்ளூர் மாவட்டம்), கல்லிக்குடி (மதுரை மாவட்டம்), பள்ளிப்பட்டு (திருவள்ளூர் மாவட்டம்) தலா 4,ஆலந்தூர் (சென்னை மாவட்டம்), சென்னை விமான நிலையம் (சென்னை மாவட்டம்), எம்ஜிஆர் நகர் (சென்னை மாவட்டம்), குப்பனம்பட்டி (மதுரை மாவட்டம்), திருத்தணி பிடிஓ (திருவள்ளூர் மாவட்டம்), நாவலூர் கோட்டப்பட்டு (திருச்சி மாவட்டம்), ஆர்எஸ்எல்- செம்மேடு (விழுப்புரம் மாவட்டம்), மணப்பாறை ( திருச்சி மாவட்டம், ஆண்டிப்பட்டி (மதுரை மாவட்டம்), செய்யாறு (திருவண்ணாமலை மாவட்டம்) தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
தென்மேற்கு பருவமழை பொறுத்தவரையிலும் இயல்பான மழை அளவை விட ஆறு சதவீதம் இந்த ஆண்டு அதிகமாக ஜூன் 1 தேதியிலிருந்து தற்போது வரை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தென் மண்டல இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். தென்மேற்கு பருவமழை பொறுத்த வரையிலும் ஜூன் 1 முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் 162 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இயல்பான மழை அளவு 153 மில்லிமீட்டர் மழை ஆகும். இது இயல்பை விட 6 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளது என தெரிவித்தார்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.