விழுப்புரம் : சிலம்பத்தில் 1 மணி நேரம் 15 நிமிடம்  இடைவிடாமல் கண்களை கட்டிக்கொண்டு, சிலம்பம் சுழற்றி நோபால் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்று, சாதனை படைத்த விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 6 வயதுடைய சிறுமிகள்.


சிலம்பம் (Silambam) என்பது ஒரு தடியடி தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். வழக்கில் இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர். இது தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல் எனப் பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலை ஆகும்.


சிலம்பத்தில் நோபல் உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில், DNRS அன்பு சிலம்பம் மற்றும் கராத்தே அறக்கட்டளை  மற்றும் விழுப்புரம் ரோட்டரி சங்கம் சார்பாக சிலம்பத்தில் நோபல் உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நோபல் உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 6 வயது உடைய  மகிழினி, ஜஸ்ரிதா, கவினா என்ற மூன்று சிறுமிகள், 1மணி நேரம் 15 நிமிடம்  இடைவிடாமல் கண்களை கட்டிக்கொண்டு, சிலம்பம் சுழற்றினர். என் மாணவிகளை பெற்றோர்கள் மற்றும் பள்ளி மாணவிகள் கைதட்டி உற்சாகப்படுத்தி, ஆரவாரம் செய்தனர்.


சிரித்த முகத்துடன் சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை


மூன்று மாணவிகளும் அழகிய சிரித்த முகத்துடன் சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றனர். இதனை நோபால் உலக சாதனை அமைப்பினர் ஆய்வு செய்து, இந்த மாணவிகளுக்கு  நோபல் உலக சாதனை விருதும் மற்றும் சான்றிதழ் வழங்கினர்.


இது குறித்து பயிற்சியாளர் அன்பரசி கூறுகையில்... இந்த மூன்று மாணவிகளும் ஒன்றாம் வகுப்பு படிக்கின்றனர்.  இந்த நோபல் உலக சாதனைக்காக இம்மாணவிகளுக்கு ஆறு மாதம் சிறப்பு பயிற்சி அளித்து வருகின்றோம். அதுமட்டுமில்லாமல் மூன்று சிறுமிகளும் 3 வருடம் சிலம்பம் பயிற்சி எடுத்து வருகின்றனர். தற்போது இவர்கள் ஒரு மணி நேரம் 15 நிமிடம் கண்களை கட்டிக்கொண்டு இடைவிடாமல் சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை படைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என அன்பரசி தெரிவித்தார்.