கள்ளக்குறிச்சி : அக்டோபர் 2 தேதி  கிராம சபை கூட்டங்களில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த ஊராட்சி மன்ற தலைவர்கள் அந்தந்த ஊராட்சிகளில் மதுவிலக்கு தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்ற  வேண்டும் என திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.


உளுந்தூர்பேட்டையில் நடைபெறவுள்ள மாநாட்டு திடலில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன்...


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெறவுள்ள மாநாட்டில் திமுக கூட்டணி கட்சி மகளிர் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்பது எனது எண்ணம் , ஆனால் இது தொடர்பாக ஏற்பட்ட விவாதம் காரணமாக திமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மட்டுமே இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.


அக்டோபர் இரண்டாம் தேதி நடைபெற உள்ள கிராம சபை கூட்டங்களில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த ஊராட்சி மன்ற தலைவர்கள் அந்தந்த ஊராட்சிகளில் மதுவிலக்கு தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்ற  வேண்டும் என்று விசிக சார்பில் வேண்டுகோள் விடுகிறேன். மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக் கூடிய ஜனநாயக சக்திகள் அனைவரும் இதற்கு ஆதரவாக குரல் எழுப்ப வேண்டும் என்பது தான் எங்களின் வேட்கை எங்களுடைய கோரிக்கை. இது தொடர்பாக மத்திய அமைச்சர்களை சந்தித்து கட்டாயமாக கொடுப்போம். பிரதமரை சந்திக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் இது தொடர்பாக அமைச்சரை சந்தித்து எங்களுடைய கட்சியின் சார்பில் கோரிக்கை மனு தருவோம்.


கள்ளக்குறிச்சி கருணாபுரம் மட்டுமின்றி மரக்காணம் பகுதியில் நடைபெற்ற நச்சு சாராய சம்பவத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தாலும் அதைவிட அதிகமான இளம் விதவைகள் உள்ளனர். உளுந்தூர்பேட்டையில் அக்டோபர் இரண்டாம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற உள்ள மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மகளிர் மாநாட்டில் இரண்டு லட்சம் பெண்கள் பங்கேற்பார்.


மதுவிலக்கு சட்டங்கள் மாநிலங்களில் இயற்றப்பட்டால், அது தேசிய சட்டமாக மாறும் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஏராளமான விதவைகள் உள்ளனர். மனித வளம் பாழாகிறது காந்தியடிகளின் பிறந்தநாள் அன்று மட்டும் மதுக்கடைகளை மூடுகிறோம். அதன் பிறகு அவரது கொள்கையை பின்பற்ற தேசிய அளவிலான மதுவிலக்கு சட்டத்தை ஏற்ற வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் எம்பி தெரிவித்தார். மது ஒழிப்பு மாநாடு முடிந்த பின்பு ஒன்றிய அரசின் அமைச்சர்களை சந்தித்து இது தொடர்பாக கோரிக்கை மனுக்களை வழங்க உள்ளோம்


தமிழக அமைச்சரவையில் பட்டியல் சமுதாயத்தை நான்கு பேர் அமைச்சர்களாகவும் மற்றும் ஒருவர் உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி ஏற்றது மகிழ்ச்சி அளிக்கிறது தமிழக முதல்வரை இதற்காக பாராட்டுகிறேன். மகளிர் மாநாடு நடத்துவதின் நோக்கமே பெண்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படும், தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளதை வரவேற்பதாக திருமாவளவன் தெரிவித்தார்.