தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரேநாளில் 326 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது

 



 

தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,502 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 575 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 44,222 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது 5,969 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று ஒரே நாளில் 6 உயிரிழந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 311-ஆக அதிகரித்துள்ளது.


 






 

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் கடந்த மூன்று தினங்களாக 300 பேருக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர் மேலும் மாவட்டத்தில் தினமும் 4 முதல் 6 பேர் உயிரிழந்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 127 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக கண்டறியப்பட்டு அங்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. கோவில்பட்டி பகுதியில் அதிகப்படியான கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. தற்போதைய நிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக படுக்கைகள் போதுமான அளவில் உள்ளன. தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான தனிப்படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஆக்சிஜன் போதுமான அளவு கையிருப்பு இருப்பதாக தெரிவித்து உள்ள மாவட்ட நிர்வாகம், ஸ்டெர்லைட் ஆலை, மாநில அரசு போன்றவற்றில் இருந்து பெறப்பட்டு வருகிறது.