கொரோனா பேரிடரைச் சமாளிக்க மேலும் ஒரு வாரகாலத்துக்கு ஊரடங்கை நீட்டித்துள்ளது தமிழ்நாடு அரசு. இதில் அடையாள அட்டையுடன் அனுமதிக்கப்படக் கூடிய கூடுதல் தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.
1. பெட்ரோல், டீசல் பங்குகள் மற்றும் எல்.பி.ஜி வழங்குதல் நொடர்பான நடவடிக்கைகள் அனுமதிக்கப்படும். (Uniform,அடையாள அட்டை, Order Copy வைத்திருக்க வேண்டும்)
2. அனுமதிக்கப்பட்ட நேரங்களைத் தவிர மற்றும் நேரங்களில் உணவகங்களில் பார்சல் சேவை மற்றும் மின் வணிகம் (Zomato Swiggy) மூலம் உணவு விநியோகம் செய்வதை தடை செய்யவேண்டும்.(Uniform,அடையாள அட்டை, Order Copy வைத்திருக்க வேண்டும்) (காலை 06-10, மதியம் 12-03, மாலை 06-09)
3. மின் வணிகம் (E-commerce) {Amazon, Filipkart, Dunzo, Big Basket, Sunny Bee, Reliance,Pazhamudir) போன்ற மின்னனு தளங்கள் மூலம் காய்கறி மற்றும் பழங்களை வீடுகளுக்கு சென்று விநியோகம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. (Uniform,அடையாள அட்டை, Order Copy வைத்திருக்க வேண்டும்)
4. கைபேசி ஆப்கள் மூலம் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் ( Big Basket, Super Daily, Licious, Grofers, Tendercuts) போன்ற நிறுவனங்களும் விற்பனையாளர்கள் அடையாள அட்டை (Uniform, Order Copy போன்ற ஆவணங்களுடன் வந்தால் அனுமதிக்கலாம்.
5. மேலும் Nilgiris, More, Big Bazaar, Daily Fresh, Tendercuts, Spencers, Grace Super Market போன்ற நிறுவனங்களும் விற்பனையாளர்கள் அடையாள அட்டையுடன் வந்தால் அனுமதிக்கலாம்.
6.ரயில்வே விமான நிலையம் மற்றும் துறைமுக நடவடிக்கைகள் அனுமதிக்கப்படும். (அடையாள அட்டையுடன் வரவேண்டும்)
7.மின்சாரம், நீர் வழங்கல், சுகாதாரம், தொலைதொடர்பு, அஞ்சல் சேவை போன்ற அடிப்படை அத்தியாவசிய உள்கட்டமைப்புத் துறைகள் தொடர்பான அனைத்து செயல்பாடுகளும் அனுமதிக்கப்படும் (அடையாள அட்டையுடன் வரவேண்டும்)
8. அச்சு (Press) மற்றும் எலக்ட்ரானிக் மீடியா செயல்பட அனுமதிக்கலாம் (அடையாள அட்டைடன் வரவேண்டும்)
9. அத்தியாவசிய தலைமைச் செயலகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், வருவாய் நிர்வாகம், காவல்துறை,
ஊர்காவல்படை, தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள், சிறைச்சாலைகள், மாவட்ட நிர்வாகம், மாவட்ட தொழில்முறை மையம், அரசு அச்சகம், உணவு மற்றும் கூட்டுறவு, மின்சாரம்,நீர் வழங்கல், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றைக் கையாளும் அரசு அலுவலகங்கள், வன அலுவலகங்கள், கருவூலங்கள். சமூக நலத்துறை, பொதுப்பணித்துறை, பராமரிப்பு பிரிவு. மின் உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோக அலகுகள், வேளாண்மை, கால்நடை பராமரிப்பு போன்றவை, மற்றும் இயற்கை பேரழிவுகள் மற்றும் தொடர்புடைய ஆதரவு சேவைகள் ஆகியவற்றைக் கையாளும் இதர துறைகள் தேவையான ஊழியர்களுடன் செயல்பட அனுமதிக்கலாம் (அடையாள அட்டையுடன் வரவேண்டும்)
10. வங்கிகள் SEBI, காப்பீடு நிறுவனங்கள், ரிசர்வ் வங்கி, ஒழுங்குபடுத்தப்பட்ட நிதிச் சந்தைகள், NPCI, CCIL போன்ற சேவைகள் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களுடன் அனுமதிக்கப்படும். ATM மற்றும் அது தொடர்புடைய வங்கி சேவைகள் அனுமதிக்கப்படும்.
11. ரத்த வங்கி உள்ளிட்ட மருத்துவம் தொடர்பான சேவைகள் அனுமதிக்கப்படும்
(அடையாள அட்டையுடன் வரவேண்டும்)
12. விசா வசதி மையங்கள் அடையாள அட்டைகளுடன் கூடிய குறைந்த ஊழியர்களுடன் செயல்படும்
(Appointment Letter வைத்திருக்கவேண்டும்).
13. துறைமுகங்கள், லிமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகளில் குளிர் சேமிப்பு மற்றும் கிடங்கு சேவைகள் உள்ளிட்ட சரக்கு கையாளுதல் அனுமதிக்கப்படும்.
(அடையாள அட்டையை காட்டவேண்டும்)
14. அனைத்து சரக்கு வாகனங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் போக்குவரத்து அனுமதிக்கப்படும்.
(பொருட்கள்/சரக்குகளின் இயக்கம், ஏற்றுதல்/இறக்குதல் உள் மற்றும் வெளிமாநிலம்
அனுமதிக்கப்படும். அடையாள அட்டையை காட்டவேண்டும்)
15. கோவிட் கேர் மருத்துவமனைகள் 7 கோவிட் கேர் மையங்கள் மற்றும் வீட்டு சுகாதார நிபுணர்களுக்கான ஹோட்டல்கள் கோவிட் கேர் லாட்ஜ்கள் , என நியமிக்கப்பட்ட ஹோட்டல்களில் செயல்பட அனுமதிக்கப்படும். அத்தகைய ஹோட்டலின் தொழிலாளர்கள் அடையாள அட்டைகளுடன் அனுமதிக்கப்படுவார்கள்.
16 .அனைந்து அரசு அலுவலகங்களும் 30 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
17 தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடி |குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் (Housekeeping) இ-பதிவுடன் அனுமதிக்கப்படும்
இ-Registration உடன் அனுமதிக்கப்படும் செயல்பாடுகள்
18 .குழந்தைகள் பராமரிப்பு இல்லம் / மாற்றுத்திறனாளிகள் / மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் / மூத்த குடிமக்கள், ஆதரவற்றோர் பெண்கள்/ கைம்பெண் மற்றும் தொடர்புடைய போக்குவரத்து இ-பதிவு மூலம் அனுமதிக்கப்படும்.
19.வசிக்கும் இடத்திலிருந்து விமான நிலையங்கள் ரயில்வே நிலையங்களுக்கு, அவர்களின் பயணம், பயணச் சீட்டுகள் மற்றம் ID ஆதாரங்களுக்கான இப்பதிவு விவரங்களுடன் அனுமதிக்கப்படும்
20. சுத்திகரிப்பு ஆலைகள், இரும்பாலைகள், சிமெண்ட் ஆலைகள், இரசாயன் ஆலை, பெயிண்ட் சர்க்கரை ஆலை ,உரத் தொழிற்சாலை, கண்ணாடி உற்பத்தி ஆலை, உருக்காலை, மற்றும், மருந்துகளின் உபகரணங்கள், துறைமுகங்கள், விமான நிலையம்; சரக்கு சிடங்குள், Data Center,பாதுகாப்புத்துறை (Defence) மற்றும் ஆட்டோமொபைல் போன்ற தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் இ - பதிவுடன் நான்கு சக்கர வாகனங்களில் பயணிக்கலாம், இந்த தொழில்களில் உள்ள பணியாளர்கள். தொழிலாளர்களின் இயக்கம் இ.Registrationஉடன் அந்த அந்த தொழில்களால் ஏற்பாடு செய்யபட்ட பேருந்துகள், வேன்கள். டெம்போ மற்றும் கார்கள் போன்ற நான்கு சக்கர வாகனங்களில் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படும்.
21.தன்னார்வலர்கள், சிறப்புத் தேவைகள். மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் ஆதியோருக்கு உணவு மற்றும் பிற சேவைகளை வழங்கும் பராமரிப்பாளர்கள் இ-பதிவுடன் பயணிக்க அனுமதிக்கலாம்.
22 .மருத்துவ அவசரநிலைகள் மற்றும் இறுதி சடங்குகளுக்கு இ-பதிவு மூலம் பதிவு செய்தபின் வேறு மாநிலம் அல்லது உள் மாவட்டத்திற்கு பயணம் செய்யலாம்.
23. மருத்துவ அவசரநிலைகளுக்கு மற்றும் இறுதி சடங்குகளுக்கு இ-பதிவு இல்லாமல் உள் மாவட்டத்திற்குள் பயணம் அனுமதிக்கப்படும்
24. வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மற்றும் ரயிலில் வரும் பயணிகளைக் கண்காணிக்க இ-பதிவு (https: //eregister.tnega,org) தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.
25 மின் பணியாளர் (Electricians), பிளம்பர்கள் (Plumbers), கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் (Computer and Motor Technicians) மற்றும் தச்சு (Carpenter) போன்ற கைத்தொழில் செய்பவர்கள் இ-பதிவுடன் பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.
இ -Registriatian அல்லது அடையாள அட்டை அனுமதிக்கப்படும் செயல்பாடுகள்:
26. கவனிப்பு இல்லங்களில் (Observation Homies) பணிபுரியும் பணியாளர்கள், பராமரிப்பு இல்லங்கள் மற்றும் சிறார்களுக்கான பாதுகாப்பு இடங்களுக்குப் பிறகு அடையாள அட்டை அல்லது இபதிவு மூலம் அனுமதிக்கப்படுவார்கள்.
மாநகராட்சியின் அனுமதியுடன் அனுமதிக்கப்படும் செயல்பாடுகள்
27.மாநகராட்சி அனுமதியைப் பெற்றபின். குடியிருப்புப் பகுதிகளில் மொபைல் வாகனங்கள் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்யவும் மற்றம் தொலைபேசி / ஆன்லைன் மூலம் பெறப்பட்ட கடைகளின் | ஆர்டர்கள் மாநகராட்சி அனுமதி பெற்றபின் அனுமதிக்கப்படும். (காலை 7 முதல் மாலை 6 மணி வரை)
28. சில்லரை வியாபாரிகள் 31.05, 2021 முதல் விற்பனைக்கு தேவையான மளிகைப் பொருட்களை கோயம்பெடு, கொத்தால்சாவடி ஆகிய இடங்களில் உள்ள மொத்த வியாபாரிகளிடமிருந்து கொள்முதல் செய்ய தங்களுடைய வாகனங்களை மளிகைப் பொருட்களை குடியிருப்பு பகுதிகளுக்கு விற்பனைக்கு 29.05.2021 அன்று மாலை 07:00 மணி முதல் இரவு 11.00 மணி வரை கோயம்பேடு, கொத்தவால் சாவடி ஆகிய இடங்களிலிருந்து அவரவர் கடைகளுக்கு பொருட்களை கொண்டுவர பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்கு பெருநகர சென்னை மாநகராட்சியால் Banner மற்றும் Sticker வழங்கப்படும் (மாலை 7 முதல் இரவு 11 மணி வரை)
29 சில்லறை வியாபாரிகள் தங்களுடைய வியாபாரத்தை கடைகளில் மேற்கொள்ளாமலும் பொருட்களை அந்தந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு வாகனங்கள் மூலம் விற்பனை செய்யலாம். (காலை 6 முதல் மாலை 7 மணி வரை )
30.கடைகளிலிருந்து பொதுமக்களுக்கு மளிகைப் பொருட்களை விநியோகிக்க பெருநகர சென்னை மாநகராட்சியில் தொழில் உரிமம் பெற்ற 7,728 விற்பனையாளர்களுக்கு இருசக்கர வாகனங்களுக்கான இரண்டு அனுமதிச்சீட்டு மற்றும் Banner / Sticker வழங்கப்படும். விற்பனை மேற்கொள்வதற்கான அனுமதி அந்தந்த மண்டல அலுவலகத்திலும், மற்றும் சம்பந்தப்பட்ட வார்டு அலுவலகத்திலும் வழங்கப்படும். அனுமதி வழங்கப்பட்ட வார்டு பகுதியில் மட்டுமே விற்பனை மேற்கொள்ளவேண்டும்.
31.பொதுமக்களின் நலன் கருதி, வணிகர் சங்கங்கள் நடமாடும் வண்டிகள் மூலம் மளிகைப்பொருட்கள் | விற்பனை செய்வதற்குரிய நடவடிக்கைகள் தற்போது நடமாடும் காய்கறி வண்டிகள் மூலம் வியாபாரம்
மேற்கோள்ளும் நிலையில் அத்துடன் மளிகைப் பொருட்களும் விற்பனை மேற்கொள்ளலாம்.
32.மேற்படி விற்பனையின் போது வியபாரிகளும் பொதுமக்களும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியினை கடைபிடிப்பது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
உண்மைத்தன்மையை தெரிந்து கொண்டு அனுமதிக்கபட வேண்டிய செயல்பாடுகள்:
33 மருந்தகங்கள், நாட்டு மருந்துக் கடைகள், கால்நடை மருந்தகங்கள் மற்றும் செல்லப்பிராணி தீவனக்கடைகள் அனுமதிக்கப்படும்.
34. பால், நீர் வழங்கல் மற்றும் செய்தித்தாள்களின் விநியோகம் அனுமதிக்கப்படுகிறது.
35 பொது விநியோக கடைகள் செயல்பட அனுமதிக்கப்படும்.(காலை 08 முதல் மதியம் 12 வரை)
36 ATM யை பயன்படுத்துபவர்கள் அந்தந்த செக்டருக்குள் இருக்கும் ATMயை பயன்படுத்த வேண்டும்.
37 விவசாய விளைபொருட்களின் போக்குவரத்து மற்றும் விவசாய தொடர்புடைய நடவடிக்கைகள் அனுமதிக்கப்படும். (விதைகள், உரம் மற்றும் அறுவடை செய்யப்பட்ட பொருட்கள்)
38 கோழி பண்ணைகள் மற்றும் கால்நடை வளர்ப்பு நடவடிக்கைகள் அனுமதிக்கப்படும்
39. கட்டுமான வளாகத்தில் தங்கியிருந்து வேலை செய்யும் தொழிலாளர்கள் கொண்ட கட்டுமானப் பணிகளில்
அனுமதிக்கப்படுவர்கள்.
40. தனியாக செயல்படுகின்ற மளிகை, சரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் செயல்பட அனுமதிக்கப்படும். (காலை 06.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை)
41 காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் செயல்பட அனுமதிக்கப்படும்.(காலை 06.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை)
42 மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். மீன் சந்தைகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் பொருட்டு, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் திறந்த வெளியில் இந்த சந்தைகளை அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் உடனடியாகச் செய்ய வேண்டும்.
43. இறைச்சிக் கூடங்கள் (Slaughter houses) மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும்.
44. சார் பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவிகிதம் டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு. பத்திரப் பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.
45 தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவிகிதப் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படும்
46. மின் பொருட்கள் (Electrical Goods), பல்புகள், கேபிள்கள், ஸ்வீட்சுகள் மற்றும் ஓயர்கள் விற்பனை
செய்யும் கடைகள் செயல்பட அனுமதிக்கப்படும்.(காலை 06.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை)
47. மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் மட்டும் ( (விற்பனை நிலையங்கள் அல்ல) செயல்பட அனுமதிக்கப்படும்.(காலை 06.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை)
48. ஹார்டுவேர் கடைகள் செயல்பட அனுமதிக்கப்படும்.
49. வாகனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் அனுமதிக்கப்படும் (காலை 06.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை)
50. கல்விப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் செயல்பட அனுமதிக்கப்படும்.
51. வாகன விநியோகிப்பாளர்களின் வாகன பழுதுபார்க்கும் மையங்கள் மட்டும் (விற்பனை நிலையங்கள் அல்ல) செயல்பட அனுமதிக்கப்படும் (காலை 06.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை)
52. வாகனங்கள், டேக்ஸிக்கள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படும். மேலும், வாடகை டேக்ஸிகளில், ஒட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில் ஒட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
53 நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காகப் பயணிக்கத் தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதிக்கப்படும்.
54. தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நடமாடும் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு காய்கறி,பழங்கள் ஆகியவை விற்பனை செய்யும் திட்டம், பொது மக்களின் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இது தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
55.பொது மக்கள் தங்களது வீடுகளுக்கு அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருட்கள்
வாங்குமாறும், இரண்டு சக்கர மற்றம் நான்கு சக்கர வாகனங்களில் கடைகளுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும்.
Also Read: ஜூன் 21 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி- பிரதமர் மோடி