டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, சட்டப்பேரவையில் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். 


காரைக்குடியில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 700 பேர் தேர்ச்சி பெற்றது எப்படி என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அரசு உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.


நில அளவர் தேர்வில் காரைக்குடி அருகே 700 பேர், ஒரே மையத்தில் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றனர். அதேபோல தென்காசியில் ஒரு குறிப்பிட்ட பயிற்சி மையத்தைச் சேர்ந்த 2 ஆயிரம் பேர் குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றனர். ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த, அடுத்தடுத்த பதிவெண்களைக் கொண்ட தேர்வர்கள், ஒருசேரத் தேர்ச்சி பெற்றது எப்படி என்று கேள்வி எழுந்துள்ளது. 


இதையடுத்து டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, சட்டப்பேரவையில் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். 


காரைக்குடியில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 700 பேர் தேர்ச்சி பெற்றது எப்படி என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அரசு உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.


இதே போன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ நாகை மாலி, தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் வேல்முருகன் ஆகியோரும் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். 


இதற்கு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் இன்றே பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ், செயலாளர் உமா மகேஸ்வரி ஆகியோர் தலைமைச் செயலகத்துக்கு நேரடியாகச் சென்று, அரசிடம் விளக்கம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


குரூப் 4 தேர்வு பின்னணி


குரூப் 4 அரசுப் பணிகளுக்காக  10,117 மொத்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு, கடந்த ஜூலை 24ஆம் தேதி அன்று நடத்தப்பட்டது. கடந்த 2014 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் சுமார் 10 முதல் 17.5 லட்சம் தேர்வர்கள் பங்கேற்ற நிலையில் 2022-ல் நடைபெற்ற தேர்வில் ஏறத்தாழ 18 லட்சத்திற்கும் கூடுதலான தேர்வர்கள் பங்கேற்றனர். இதற்கான தேர்வு முடிவுகள் பலகட்ட தாமதத்துக்குப் பிறகு, சரியாக 8 மாதங்கள் கழித்து, மார்ச் 24ஆம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது.


இதையும் வாசிக்கலாம்: TNPSC Group 4 Result: முடிவுக்கு வந்த 8 மாதக் காத்திருப்பு- குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு- பார்ப்பது எப்படி? 


TNPSC Group 4 Result: குவிந்த 18 லட்சம் பேர்; முடங்கிய டிஎன்பிஎஸ்சி இணையதளம்- தேர்வர்கள் அதிர்ச்சி!