திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் பாமக அரசியல் பயிலரங்கத்தில் வழக்கறினர் பாலு எழுதிய வன்னிய புராணம் என்ற நூலை டாக்டர் ராமதாஸ் வெளியிட எழுத்தாளர் தமிழ்மகன் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் பாமக கௌரவத்தலைவர் கோ க மணி, வன்னியர் சங்கத்தலைவர் பு.தா அருண்மொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ கே மூர்த்தி, எழுத்தாளர்கள் கண்மணி குணசேகரன், ஜெயபாஸ்கரன், முன்னாள் எம்பி செந்தில் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


பின்னர் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், "பொங்கல் பண்டிகைக்கு பிறகு  நான் எழுதிய வரும் ”தமிழைத் தேடி”  என்கின்ற நூலை வெளியிட்ட பிறகு சென்னையிலிருந்து தஞ்சை வழியாக சங்கம் வளர்த்த மதுரை வரையில் தமிழைத் தேடி பிரச்சாரப் பயணம் செல்கிறேன். கொரோனா சமயத்தில் சங்க இலக்கியங்களை படிக்க விரும்பினேன் ஆனால் படிக்க முடியவில்லை. கொரோனா அதற்கு முன்னதாக போய்விட்டது. ஆயக்கலைகள் 64 ம் சொல்லிக் கொடுத்தது நம் இனம் தான். நம் படைப்பாளிகள் நூல்களை கண்காட்சிகளாக வைத்து பெரிய கூட்டம் என்ற நடத்த வேண்டும்.


இதற்கு படைப்பாளிகள்  பெரும் திரளாக அதாவது ஒன்று பட வேண்டும். தமிழைத் தேடி என்ற நூல் வெளியீட்டுக்கு பிறகு சென்னையில் இருந்து தஞ்சை வழியாக மதுரை வரை தமிழை தேடி செல்கிறேன். “உயிரை தருகிறேன் தமிழை தா...” என பலர் உயிரை விட்டுள்ளனர். இப்போதைய இளைஞர்களுக்கு வருங்கால சமுதாயத்தினருக்கு தமிழை பேசவே தெரியவில்லை. பெண்கள் பிள்ளைபேறுடன் இருப்பதை பெற்றோர்கள் “கன்சீவ்” ஆக இருக்கிறாள் என கூறுகிறார்கள், பிறந்தநாள் விழாக்கள் “பர்த்டே” எனவும் நன்றி சொல்வதை “தேங்க்ஸ்” எனவும் ஆங்கிலத்தில் கூறுவதை கௌரவமாக நினைக்கிறார்கள். வணக்கம் என்பதை “குட் மார்னிங்” என தெரிவிக்கிறார்கள். “மட்டன் சிக்கன்” வாங்கினேன் என கூறுகிறார்கள். என்னுடன் பேசும் போது ஐயா என தொடங்குகிறார்கள். வணக்கம் சொல்வதற்கு கூட தெரியவில்லை. பெண் குழந்தை பிறந்தால் மூன்று முறை பெண் தெய்வம் என கூற வேண்டும் என அறிவுறுத்தி வருகிறேன்" எனக் கூறினார்.





என்ன செய்ய வேண்டும்? 




நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.