1. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் வீட்டில் பதுக்கி வைத்து இருந்த 20 கிலோ கடல் அட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

 

2. ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 56 நபர்களிடம் 8 கோடி ரூபாய் மோசடி செய்த 13 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

3. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளுக்கு நேற்று முன் தினம் வரை 62 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 153 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.  இதனால் இதுவரை மாநகராட்சியில் தாக்கல் செய்துள்ள மனுவில் எண்ணிக்கை 215 ஆகியுள்ளது.



 

4. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் முருகனை திருமணம் செய்து கொண்ட வள்ளிக்கு தாய் வீட்டு சீதனம் கொண்டுவரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

5. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா 07.02.2022 முதல் 18.02.2022 வரை 12 தினங்கள் கொண்டாடப்படவுள்ளது. மாசித் திருவிழா நிகழ்ச்சியில் தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 



 

6. மதுரை உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த தங்கப்பேச்சி என்ற மருத்துவ கல்லூரி மாணவிக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

 

7. வெளி மாநிலத்தில், விளைச்சல் அதிகரிப்பு காரணங்களால் மார்க்கெட்டுகளில் தேங்காய் கொள்முதல்விலை குறைந்துள்ளது. இதனால், தேனி மாவட்ட கடமலை-  மயிலை ஒன்றிய விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

 



 

8. நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி பறக்கும் படையினரிடம் தேனி மாவட்ட ஆட்சியர் ஆலோசனையில் ஈடுபட்டார்.

 

9. நெல்லை மாவட்டத்திற்கு வருகை தந்த குடியரசு தின அலங்கார ஊர்தியியை பொதுமக்கள்  மலர்தூவி வரவேற்றனர்.

 

10. திண்டுக்கல் மாவட்டத்தில் கஞ்சா வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 குற்றவாளிகள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.