தமிழக முழுவதும்  பிரசித்தி பெற்ற திருவண்ணாமலையில் மாவட்டம் ஆரணி அடுத்த  படவேடு கிராமத்தில் அமைந்துள்ள படவேடு ரேணுகாம்பாள் கோயில் மகா கும்பாபிஷேகம் வருகின்ற 6ம் தேதி நடைபெற உள்ளது. அதையொட்டி, மகா கும்பாபிஷேக முன்னேற்பாடுகள் குறித்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம்  மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து, அறநிலையத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு நடத்தினார்.

Continues below advertisement

 

Continues below advertisement

 

அதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்தது : “படவேடு ரேணுகாம்பாள் அம்மன் கோயில் தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். எனவே, கும்பாபிஷேகத்தை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால், கூட்ட நெரிசல் ஏற்படும். ஆனால், கொரோனா தொற்று பரவல் காரணமாக, பக்தர்களை அனுமதிப்பதில் கட்டுப்பாடுகளை விதிக்க மாவட்ட நிர்வாகத்தால் வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, படவேடு பகுதியை சேர்ந்த உள்ளூர் பக்தர்களை மட்டும் அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக அதிகபட்சம் 3 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்கலாம். அதற்கான அனுமதி சீட்டு, ரேணுகாம்பாள் அம்மன் கோயில் செயல் அலுவலர் அலுவலகத்திலும், திருவண்ணாமலையில் உள்ள அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் அலுவலகத்திலும் வழங்கப்படும்” என்றார்.

 

 

 

Statue of Equality: ஹைதராபாத்தில் 216 அடி உயர ராமானுஜர் சிலையைத் திறந்து வைக்கும் பிரதமர் மோடி!

“அனுமதிக்கப்படும் பக்தர்களும் ஒரே பகுதியில் கூட்டமாக கூடுவதை தவிர்க்க, கோயிலை சுற்றிலும் பக்தர்கள் பரவலாக நின்று தரிசிக்க தேவையான வசதிகளை செய்ய வேண்டும். உள்ளூர் பக்தர்கள் என்பதற்கான ஆதார் உள்ளிட்ட ஏதேனும் ஒரு அடையாள ஆவணங்களை அளித்து, கும்பாபிஷேக தரிசனத்துக்கான அனுமதி சீட்டு பெறலாம். வெளியூர் பக்தர்கள் வருகையை தவிர்க்க, படவேடு செல்லும் முக்கிய சாலை சந்திப்புகளில் காவல்துறையினர்  கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். வெளியூர் வாகனங்களை அனுமதிக்கக்கூடாது. அதேபோல், சிறப்பு பஸ்களை இயக்கக்கூடாது” என மாவட்ட ஆட்சியர் முருகேஷ்  தெரிவித்தார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண