சீமான் மீது கூறிய புகார்களை நிரூபிப்பேன் என நடிகை விஜயலெட்சுமி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் அளித்துள்ள நிலையில், திடேரென புகாரை வாபஸ் பெற்று கொண்டு பெங்களூரு சென்றார்.  இதற்கிடையில் புகார் தொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் தனது மனைவி கயல்விழியுடன் ஆஜரானார். விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தி சீமான், “ என் மீது நடிகை விஜயலட்சுமி கொடுத்த வழக்கை 2012-ம் ஆண்டு திரும்ப பெற்றுக் கொண்டார். இப்போது வழக்கு திரும்ப பெற்று இருக்கிறார். எனக்கு காவல்துரையினர் கடந்த 9-ம் தேதி அழைப்பாணை அனுப்பு விசாரணைக்கு வருமாறு கூறினார்கள். என்னால் அப்போது வர இயலவில்லை. செப்டம்பர் 18-ம் தேதி வருவதாக சொன்னேன். விநாயகர் சதுத்தி என்றாலும் எனக்கு பிரச்சனை இல்லை என்று தெரிவித்தேன். தூண்டுதல் இல்லாமல் விஜயலட்சுமி எப்படி புகார் கொடுத்திருக்க முடியும்? நடிகை விஜயலட்சுமி சொன்ன குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் வந்து சொல்ல வேண்டும்.” என்று  பேசியிருந்தார். 


சீமான் அவர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டும் என்று சொன்னதற்கு நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டு பதிலளித்துள்ளார். 


” வீரலட்சுமி வீட்டில் இருந்து நான் வெளியேற்றப்பட்ட போது சாட்டை துரைமுருகனிடம் தொலைபேசியில் பேசினேன். பாலசுப்ரமணியன் என்ற வழக்கறிஞரை அனுப்பி வைத்தார் சாட்டை துரைமுருகன். அவர்தான் இரவோடு இரவாக சென்னையில் இருந்து பெங்களூருக்கு அனுப்பினார். அவரிடம் உள்ள செல்போன் உரையாரல் விவரங்களை எடுத்தாலே சீமான் என்னிட்டம் பேசியது தெரியும். காவல் துறை அதிகாரிகளையும் நீங்கள் அச்சுறுத்துகிறீர்கள். நீங்க மான, நஷ்டம் வழக்கு போடுங்க. பாலியல் வழங்குகளை 12 ஆண்டுகளுக்குப் பிறகு என்னால நிரூப்பிக்க முடியாமல் போகலாம். ஆனால், உங்கள் மீதுள்ள மற்ற குற்றச்சாட்டுகள் உண்மை. அதை என்னால் நிரூப்பிக்க முடியும். என்னை பொய் சொல்லும் பெண் போல சீமான் சித்தரிக்க நினைத்தால், இந்த போர் முடியவே முடியாது என்று உறுதியாக சொல்கிறேன்” என்று வீடியோ வெளியிட்டு சீமான் கருத்துகளுக்கு பதிலளித்துள்ளார்.


முன்னதாக சீமான் பேசியபோது, “விஜயலட்சுமி தன்மீது இந்தக் குற்றச்சாட்டை வைக்க அவரைத் தூண்டியது திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர்தான் என்று கூறினார். மேலும் “ இதுவரை பல்வேறு சமூகப் போராட்டங்களை முன்னெடுத்ததற்காக என்மீது மொத்தம் 128 வழக்குகள் இருக்கின்றன. அந்த வழக்குகள் எதிலும் நான் குற்றவாளி என்று நிரூபிக்க முடியாமல் தற்போது இப்படியான ஒரு முயற்சியை எடுத்துள்ளார்கள். ஒரு போராட்டக்காரனை மக்கள் மத்தியில் சிதைக்க வேண்டும் என்றால் பெண்களை வைத்து இப்படி ஒரு அவதூறு பரப்பினால் போதும்.


2011 ஆம் வருடம் என்மீது புகாரளிக்கப் பட்டபோது ஏன் இந்த விசாரணையை அப்போது மேற்கொள்ள வில்லை. நான் விஜயலட்சுமியை திருமணம் செய்துகொண்டேன் என்று சொல்கிறார்களே. அப்படியென்றால் திருமணத்திற்கு ஒரு ரசீது வழங்கப் பட்டிருக்க வேண்டும் இல்லையா. அதை சான்றாக காட்டச் சொல்லுங்கள். நான் அவர்களை ஏமாற்றியதாக சொல்கிறார்கள். உண்மையைச் சொன்னால் கடந்த 13 ஆண்டுகளாக இந்தப் பெண்களால் வன்கொடுமை செய்யப்பட்டு வருகிறேன். இத்தனை கோடி மக்களால் நேசிக்கப்படும் ஒரு மனிதர் சமூகத்தில் முன் அசிங்கப்படுவதை நீங்கள் ரசிக்கிறீர்கள்.” என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.