இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 16 வயதான இவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். சென்னை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் அதிகாலை 3 மணியளவில் தூக்கிட்டு கொண்டதாகாவும், பின்பு அவர் சடலமாக மீட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாகவே அவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.


இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தேனாம்பேட்டை போலீசார் விரைந்து சென்று மீராவின் உடலை மீட்டு. பிரேதபரிசோதனைக்காக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தடய அறிவியல் பிரிவினரும் அங்கு ஆய்வு நடத்தி வருகின்றனர். பேட்மிண்டனில் ஆர்வம் கொண்ட மீரா, கடந்த ஆறு மாதங்களாக மனசோர்விற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று பள்ளி விடுமுறை என்பதால், தனது நண்பர்களை தனியாக சென்று பார்த்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, மீராவின் தோழிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். அதோடு, மீரா ஏன் உளைச்சலில் இருந்தார் என்பது குறித்து அறிய, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவரிடம் விசாரிக்கவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதனிடயே, சிறுமியின் உடற்கூறாய்வு நடந்து முடிந்தது.


இதையடுத்து மீராவின் உடல் விஜய் ஆண்டனியின் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனியின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதோடு, ஜாகுவார் தங்கம், பாரதிராஜா உள்ளிடோர்ர் நேரில் அஞ்சலி செலுத்தினர். பலர் சமூக வலைதளங்களிலும் விஜய் ஆண்டனியின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி வருகின்றனர். தொடர்ந்து, இன்று மாலையே மீராவின் உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெறும் என கூறப்படுகிறது.


 


 


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவற்றை, நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)