கருப்பாக இருந்தால் திராவிடர் என்றால் எருமை மாடு கூட கருப்பாக இருக்கிறது , எருமை திராவிடரா ?  என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.


அம்பேத்கருடன், பிரதமர் மோடியை ஒப்பிட்ட இளையராஜாவை திராவிட இயக்கங்கள் எதிர்ப்பும், வலதுசாரி அமைப்புகள் ஆதரித்தும் கருத்து தெரிவித்த நிலையில்,  இளையராஜாவின் மகனும், இசையமைப்பளாருமான யுவன்சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதில், “கருப்பு திராவிடன், பெருமைமிகு தமிழன்” என கேப்ஷனோடு புகைப்படத்தை பகிர்ந்தார். வைரலான இந்தப் புகைப்படத்தால் ஒரு தரப்பு ஆதரவும், ஒரு தரப்பு எதிர்ப்பும் தெரிவித்தது.


இந்த நிலையில், கருப்பாக இருந்தால் திராவிடர் என்றால் எருமை மாடு கூட கருப்பாக இருக்கிறது , எருமை திராவிடரா ?  நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.  மேலும், “திராவிடனா இரு, இல்லையென்றால் தமிழனா இரு, ஏன் குழப்பம்; யுவன் சின்னப்பிள்ளை என்பதால் புரிதல் இல்லை. கேஜிஎப் யஷ் கூட பெருமைமிகு கன்னடிகா என்கிறார். அதேபோல் பெருமைமிகு தமிழன் என்று மட்டும் சொல்லலாமே. தேவைப்பட்டால் இந்தியன் என்கிறீர்கள், தமிழன் என்கிறீர்கள்? ஏன் இத்தனை முகமூடி” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.


தொடர்ந்து, தமிழ், திராவிடம் என்பது சம்பந்தமான கருத்துகளை நேராகவும், மறைமுகமாகவும் பேசி வருகிறார் யுவன். சமீபத்தில் ‘இந்தி தெரியாது போடா’ என்ற டி-சர்ட் அணிந்து அந்த பதிவு வைரலானது. இந்நிலையில், சினிமாவில் 25 ஆண்டுகள் நிறைவு விழாவில் யுவன் பேசும்போது ”எனக்கு உண்மையில் இந்தி தெரியாது. யாரையும் புண்படுத்தும் நோக்கில் அந்த டி-சர்ட்டை அணியவில்லை” என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும், பிரதமரை புகழ்ந்த இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது கொடுக்க பாஜக கோரிக்கை வைத்தது குறித்தும் சீமான் கேள்வி எழுப்பினார். புகழ்ந்து பேசினால் விருது கொடுப்போம் என்கிறார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண