காஞ்சிபுரம் காந்தி சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் கச்சா பட்டு 130% விலை உயர்வு குறித்து ஆலேசானை கூட்டம் சிஐடியு மாநில கைத்தறி சம்மேளன பொது செயலாளர் E. முத்துகுமார் தலைமையில் நடைபொற்றது. இக்கூட்டத்தில் பட்டு நெசவு தொழில் நெருக்கடி குறித்து விவாதிக்க ஜவுளி உற்பத்தியாளர்கள் தொழிற்சங்க அமைப்புகள் ஜவுளி வர்த்தகர்கள் கோறா வர்த்தகர்கள் கூட்டுறவு சங்க தலைவர்கள் பங்கேற்க்கும் ஆலேசானை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பட்டு உற்பத்தித் தொழிலுக்கு ஜிஎஸ்டி வரியை உற்பத்திக்கு எடுத்துவிட்டு பட்டு சேலை விற்பனைக்கு ஜிஎஸ்டி வரி விதித்தால், தற்போதுள்ள நிலைமை கட்டுக்குள் கொண்டு வரலாம் என கோரப்பட்டு, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி உள்நாட்டிலே உற்பத்தி செய்யும் மேக் இன் இந்தியா மத்திய அரசின் கொள்கையால் உள்நாட்டு உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்ததால், தட்டுப்பாடு ஏற்பட்டு விலை ஏற்றம் கூடுதலாக விற்பனை செய்யப்படுவதால் சிறுகுறு நெசவு தொழிலாளர்கள் பாதிப்படைவதாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பட்டு நெசவுக்கு குறித்த விலை குறைப்பானது மூன்று துறைகளை உள்ளடக்கி மத்திய அரசு நிர்ணயம் செய்து வருகின்றன. அவற்றில் நிதியமைச்சகம், டெக்டைல்ஸ் நிறுவனம், வர்த்தகம் போன்ற துறைகளின் மூலம் நிர்ணயம் செய்து கட்டுப்பாடுகள் உள்ளதால் விரைவில் சுமுகமான தீர்வு ஏற்பட காலதாமதம் ஆவதாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
ஆகவே உற்பத்திக்கு தேவையான கோரா உற்பத்தி விலை குறைப்பு செய்தால் மட்டுமே பட்டு நெசவை காப்பாற்ற முடியும் என பட்டு நெசவாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். தற்சமயம் ஒரு கிராம் பட்டு 11 ரூபாய்க்கு விற்பனை செய்தால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டு விற்பனையாளர்கள், விசைத்தறியை நாடி குறைந்த விலையில் பட்டு சேலைகளை பெற்று விற்பனை செய்வதால் சிறு குறு தொழில்கள் பாதிப்படைவதாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. எனவே அனைத்து பட்டு நெசவு உற்பத்தியாளர்களும் ஒன்றிணைந்து ஒரே குரலில் நிலையான விலை நிர்ணயித்தால் இப்பிரச்சனையில் இருந்து தீர்வு காணலாம் என கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டன. பின் செய்தியாளர்களை சந்தித்த முத்துகுமார் கூறுகையில், கைத்தறி நெசவுத் தொழிலில் கச்சா பட்டு 130% விலை உயர்வை கண்டித்தும், மூலக்கூறுகள் விலை உயர்வை கண்டித்தும் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம், தொழிற்சங்க அமைப்புகள், ஜவுளி வர்த்தகர்கள், கோர பட்டு வர்த்தகர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள் உள்ளிட கூட்டமைப்பு சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் காஞ்சிபுரம், ஆரணி, கும்பகோணம், கோயம்புத்தூர், பரமக்குடி உட்பட தமிழகம் முழுவதும் கைத்தறி நெசவு அனைத்து மையங்களில் மே 3ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பட்டு சரிகை சேலை உற்பத்தி சங்க செயலாளர் பெருமாள், வணிகர் வர்த்தக சங்கத் தலைவர் ரங்கநாதன், தொமுச தஞ்சாவூர் தங்கவேலு, சிஐடியு சங்க தலைவர் தஞ்சாவூர் நாகேந்திரன், முருகன் பட்டு கூட்டுறவு சங்க துணை தலைவர் இளங்கோவன் மற்றும் பருத்தி பட்டு நெசவு தொழிலாளர்கள் சிஐடியு சங்க நிர்வாகிகள் மற்றும் அனைத்து கூட்டுறவு சங்க தலைவர்கள் இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.