2011ம் ஆண்டு கள்ளக்காதல் வழக்கின் விசாரணை ஒன்றில் கணவனுக்கு திருவண்ணாமலை நீதிமன்றம் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்திருந்தது. இந்த வழக்கின் மேல்முறையீடு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதி பரதசக்கரவர்த்தி விசாரித்தார்.
அப்போது, வழக்கின் விசாரணையை கேட்ட நீதிபதி திருமணத்திற்கு மீறிய உறவு ( கள்ளக்காதல்) திருமணமான தம்பதியினரிடையே கடுமையான குடும்பச் சண்டையை ஏற்படுத்தினால், இந்திய தண்டனைச் சட்டம் ஐ.பி.சி. 498ன் ஏ பிரிவின்கீழ் மனைவிக்கு மனக்கொடுமையை ஏற்படுத்திய குற்றத்திற்காக அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.
மேலும், நீதிபதி தனது தீர்ப்பில் ஒட்டுமொத்தமாக அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு, கடுமையான மன அதிர்ச்சியை ஏற்படுத்திய மற்றும் மனைவியின் மன ஆரோக்கியத்தை பாதித்த திருமணத்திற்கு புறம்பான உறவின் குற்றம் சாட்டப்பட்டவரின் நடவடிக்கை ஐ.பி.சி. 498 ஏ பிரிவின் கீழ் நிச்சயமாக அவருககு கொடுமையாக இருக்கும் என நம்புவதாக நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இருப்பினும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெரோன் பாண்டி என்ற நக்கீரனுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையை 6 மாதமாக குறைத்தார்.
கடந்த 2016ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கே.வி.பிரகாஷ்பாபு என்பவர் தொடர்புடைய வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், திருமணத்திற்கு புறம்பான உறவு மனைவியை மனக்கொடுமைக்கு ஆளாக்குவதாக அமையாது என்று கூறி உத்தரவிட்டிருந்தார். மேலும், தீர்ப்பை முழுமையாக படிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். மேலும், அந்த தீர்ப்பில் ஒருவர் கூடுதல் தாம்பத்ய உறவில் ஈடுபட்டிருப்பதாலும், மனைவியின் மனதில் சில சந்தேகங்கள் இருப்பதாலும், பிரிவின் கீழ் தற்கொலைக்குத் தூண்டுதல் என்ற குற்றத்தை ஈர்ப்பதை மனக்கொடுமையாக கருத முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மேலும், உச்சநீதிமன்றத்தின் அந்த தீர்ப்பில் மனக்கொடுமை பற்றிய கருத்து, சம்பந்தப்பட்டவர்களின் சமூக அடுக்கு, அவர்களின் தனிப்பட்ட கருத்து, அவர்களின் சகிப்புத்தன்மை மற்றும் உணர்திறன் அளவைப் பொறுத்தது என்று கூறியிருந்தது. அதை பொதுமைப்படுத்துவது கடினம் என்றும் கூறியிருந்தது.
மேலும் படிக்க : TN Urban Local body elections 2022: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட அதிமுக !
மேலும் படிக்க : மேட்டூர் அணையின் நீர்வரத்து 846 கன அடியில் இருந்து 895 கன அடியாக அதிகரிப்பு.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்