ஒவ்வொரு நகைக்கடைகளுக்கும் 6 இலக்க HUID எண் தனியாக வழங்கப்படும் என ஹால்மார்க் தர நிர்ணய அமைப்பு தெரிவித்துள்ளது. 


ஹால்மார்க் தர நிர்ணய அமைப்பின் சென்னை பிரிவு தலைவர் பவானி தரமணியில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "ஹால்மார்க் உடன் 6 இலக்க HUID எண்கள் உள்ள தங்க நகைகளை மட்டுமே ஏப்ரல் 1ஆம் தேதி முதல் விற்க அனுமதிக்கப்படும். 'Bureau of indian standards' அமைப்பின் BIS CARE APP-இல் 6 இலக்க எண்ணை பதிவிட்டு நகை விவரங்களை அறியலாம்" என்றார்.