புதுச்சேரி சட்ட மன்றத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு அரசுவிழா நடத்தப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார், இந்த அறிவிப்பு ரங்கசாமி அறிவித்த பின்னர் திமுகவினர் மற்றும் அதிமுகவினர் நன்றி தெரிவித்தனர்.




2023-24 ம் ஆண்டிற்கான பட்ஜெட்:


புதுச்சேரி: அனைத்து குடும்ப உணவு பங்கீட்டு அட்டைதாரர்களும் பயன்பெறும் வகையில்  சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாதம் ஒன்றிற்கு 300 ரூபாய்  வீதம்  வருடத்திற்கு மொத்தம் 12 சிலிண்டருக்கு மானியம் வழங்கப்படும் என பட்ஜெட்டில் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.


புதுச்சேரியில் 2023-24 ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை  நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். அனைத்து குடும்ப உணவு பங்கீட்டு அட்டைதாரர்களும் பயன்பெறும் வகையில்  சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாதம் ஒன்றிற்கு 300 ரூபாய்  வீதம்  வருடத்திற்கு மொத்தம் 12 சிலிண்டருக்கு மானியம் வழங்கப்படும். இதன் மூலம் அரசிற்கு ஆண்டிற்கு 126 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். 


முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பெண் குழந்தை பிறந்தவுடன் 50 ஆயிரம் ரூபாய் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் 18 ஆண்டுகளுக்கு நிரந்தர வைப்பு நிதியாக செலுத்தப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். உலக தமிழ் மாநாடு புதுச்சேரியில் நடத்த திட்டமுள்ளதாக தெரிவித்த ரங்கசாமி, பால் உற்பத்தியை அதிகரிக்க உயர் ரக கலப்பின பசு 50% மானியத்தில் வழங்கப்படும். சிறிய பால் பண்ணை அமைக்க மானியம் வழங்கப்படும். பால் அறவை இயந்திரம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்தார்.


வான்கோழிகள் வளர்ப்பை ஊக்குவிக்க 50% மானியம், ஆட்டு பண்ணை வைக்க 50% மானியம், ஆதிதிராவிடர்களுக்கு 9 லட்சம் ரூபாய் 100% மானியம், பிற வகுப்பினருக்கு 5 லட்சம் ரூபாய் வரை 50% மானியம் என்றும் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். மத்திய அரசின் புதிய திட்டமான PM SHRIல் புதுச்சேரியில் 12 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.இவை 24 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்படும் என்றும்  அரசு அறிவித்தபடி 11,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கனிணி விரைவில் வழங்கப்படும். மாலையில் சிறுதானிய சிற்றுண்டி வழங்கப்படும் என்றும்  அரசு பள்ளிகளில் கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில்ல 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை CBSE பாடத்திட்டம் கொண்டு வரப்படும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். மீனவ முதியோருக்கு ஓய்வூதியம் அதிகரிப்பு 70-79 வயதுள்ளவர்களுக்கு வழங்கப்படும் 3000 ரூபாய் 3500 ஆக உயர்த்தி வழங்கப்படும் இதன் மூலம் 2000 மீனவர்கள்  பயன்பெறுவார்கள் முதல்வர் அறிவித்தார்.