கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


குமரிக்கடல் பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தென்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நாளை நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடியுடன் மிதமான மழை பெய்யக்கூடும், 14ஆம் தேதி கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், டெல்டா மாவட்டங்களில் மழை குறையும் எனவும், வடகடலோர மாவட்டங்கள், திருச்சி, அரியலூர், பெரம்பலூரில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், சென்னையை பொறுத்தவரை நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்  என்றும் சென்னை வானிலை தெரிவித்துள்ளது.




மேலும் படிக்க: Hijab Row | பூணூலை இழுக்காதீங்க..ஹிஜாப் போடுவோம்.. ஹிஜாப் விவகாரத்தில் லஷ்மி ராமகிருஷ்ணன் வெளியிட்ட வீடியோ..




 


முன்னதாக, கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. திருப்புதல் தேர்வு நடைபெறும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். நாகை மாவட்டத்தில் கனமழை காரணமாக 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.


மேலும், தொடர் கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தேர்வு நடைபெறும் மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வர வேண்டும் என்றும் அறிவித்துள்ளார்.


இதனிடையே, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. திருவாரூர் மாவட்டம் தேவர்கண்டநல்லூர், விளமல், மாங்குடி, மாவூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, திருவையாறு, அம்மாபேட்டை, அய்யம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் அதிகபட்சமாக 11செமீ மழை பதிவாகியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண