TN Rain Alert:  தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று 13 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது, 


21.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


22.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 


23.05.2023 முதல் 25.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 


அதிகபட்ச வெப்பநிலை : 


21.05.2023 மற்றும் 22.05.2023: உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.


குறிப்பு: அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது  வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை  பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை  பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.
 
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):   


பெரியகுளம் (தேனி) 7, பென்னகரம் (தருமபுரி), திரூர் KVK AWS (திருவள்ளூர்) தலா 4, மாரண்டஹள்ளி (தருமபுரி) 3, இளையான்குடி (சிவகங்கை), காமாட்சிபுரம் (திண்டுக்கல்) தலா 2, நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல்), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி), ஓட்டன்சத்திரம் (திண்டுக்கல்), சிவலோகம் (கன்னியாகுமரி), சோலையாறு (கோயம்புத்தூர்), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), உதகமண்டலம் DRMS (நீலகிரி), வைகை அணை (தேனி), கிளென்மோர்கன் (நீலகிரி), காக்காச்சி (திருநெல்வேலி) தலா 1.


மீனவர்களுக்கான எச்சரிக்கை:  ஏதுமில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




மேலும் படிக்க


TN Weather Update: 11 மாவட்டங்களில் சதமடித்த வெயில்.. அதிகபட்ச வெப்பநிலை எவ்ளோ தெரியுமா? இன்றைய வானிலை நிலவரம்..