வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததைப் போல் சென்னை மட்டும் இல்லாமல் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் கடலோர மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் அதனைச் சுற்றிய மாவட்டங்களிலும் மழை பெய்து வருகின்றது. இதனால் மயிலாடுதுறை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் இன்று அதாவது ஜனவரி 8ஆம் தேதி ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவித்துள்ளது. மற்ற அரசு அலுவலகங்களும் பொது சேவை நிறுவனங்களும் வழக்கம்போல் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் டெல்டா மாவட்டங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் விடுமுறை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுமட்டும் இல்லாமல் திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கும், காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துள்ளது. தலைநகர் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.
எங்கெல்லாம் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
செங்கல்பட்டு, திருவண்ணாமலை, அரியலூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டும் இல்லாமல் காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நாகை மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டும் இல்லாமல் கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுகள் ஒத்திவைப்பு
கனமழை காரணமாக இன்று நடைபெறவிருந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் மீண்டும் எப்போது நடக்கும் என்ற விபரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.
கொட்டித்தீர்த்த கனமழை விபரங்கள்
வானிலை ஆய்வு மையம் கடலோர மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் கனமழை முதல் மிக கனமழை வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஏற்கனவே எச்சரித்தது. இதன் அடிப்படையில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. நேற்று மாலையில் பெய்துவரும் கனமழையால் திருவாரூர் மாவட்டத்தில் 21.2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழியில் 22 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல் கும்பகோணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 10 செ.மீ மழை பெய்துள்ளது. மரக்காணம் - 13 செ.மீ, புதுச்சேரி, காரைக்கால், கடலூர் மற்றும் எண்ணூர் உள்ளிட்ட இடங்களில் தலா 9 செ.மீ, கொள்ளிடம் - 18 செ.மீ, மயிலாடுதுறை - 10, மணல்மேடு - 11 செ.மீ, நாகை - 16 செ.மீ, வானூர் - 12 செ.மீ, விழுப்புரம் - 8.5 செ.மீ, திண்டிவனத்தில் - 7 செ.மீ அளவு மழை பெய்துள்ளது. அதேபோல் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 13 செ.மீ மழை பெய்துள்ளது.
மழையால் ஏற்பட்ட விபரீதம்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுது மோனிஷா என்ற 9 வயது சிறுமி உயிரிழந்ததுள்ளது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாதுகாப்பாக நிறுத்தப்பட்ட ஃபைபர் படகுகள்
கனமழை காரணமாக நாகை துறைமுகத்தில் மீன் பிடிக்கு பயன்படுத்தப்படும் ஆயிரக்கணக்கான ஃபைபர் படகுகளை மீனவர்கள் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தியுள்ளனர். நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.