வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது. அதனையடுத்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, சவளக்காரன், கோட்டூர், லெட்சுமங்குடி, கூத்தாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.



கடந்த ஒரு மாதமாக கடுமையான வெப்பம் நிலவி வந்த நிலையில் இந்த திடீர் கனமழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

கோடை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.