இதற்கு முன்பு மார்ச் 26-ஆம் தேதி 16,481 மெகாவாட் மின் தட்டுப்பாடு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. முந்தைய ஆண்டுகளைப்போல் இல்லாமல், உச்சகட்ட மின் தேவை தமிழகத்தில் மாலை நேரங்களில் ஏற்படுகிறது என்றும், மேலும் அது குளிரூட்டிகளின் (ஏர் கண்டிஷனர்களின்) பயன்பாட்டு நேரத்துடன் ஒத்துப்போகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.




கடந்த ஆண்டு பதிவான நல்ல பருவமழையின் காரணமாக, விவசாயிகள் பம்ப் செட்களைப் பயன்படுத்தி இரண்டாவது பாசனத்திற்கான வேலைகளை தொடங்கியுள்ளனர். மேலும், ஏப்ரல் 1 முதல் விவசாய நிலங்களுக்கு தினமும் 24 மணிநேரமும் நாங்கள் மின்சாரத்தை வழங்கத் தொடங்கியுள்ளோம். இதனால் கடந்த ஒரு மாதமாக பிற்பகல் நேரத்திலும் அதிகபட்ச மின் தேவை ஏற்பட்டுள்ளது. 


கோடைகாலத்தில் மக்கள் பலர் வீட்டில் இருந்தபடியே வேலைசெய்து வருவதால் பல வீடுகளில் குளிரூட்டிகள் தொடர்ந்து செயல்படுத்தப்படுகின்றன. இதனால் மின் தட்டுப்படும் மேலோங்கியுள்ளது, மேலும் இந்த மின் தட்டுப்பாட்டால் கடந்த சனிக்கிழமையன்று சுமார் 2714 மெகாவாட் சூரிய ஒளியையும் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டதாகவும் அந்த மூத்த அதிகாரி கூறியுள்ளார். தற்போது நிலவும் இந்த 17000 மெகாவாட் மின் தட்டுப்பாட்டினை கடந்த ஆண்டே எதிர்பார்த்ததாகவும். ஆனால் கொரோனா பரவல் பொருளாதார ரீதியாக ஏற்படுத்திய தாக்கத்தால் சென்ற ஆண்டு இந்த தட்டுப்பாடு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.    




 
கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 3-ஆம் தேதி 16,151 மெகாவாட் மின்தட்டுப்பாடு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அதைப்போலவே கோடைகாலத்தில் 10,000 முதல் 12,000 மெகாவாட் வரை மின்தட்டுப்பாடு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.