மகளிர் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியா 5 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தியா பேட்டிங்கை தொடங்கிய சில நேரத்திற்கெல்லாம் மூன்று விக்கெட்களை இழந்தது. 173 என்ற இலக்கை நோக்கிய பயணத்தில் களமிறங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 34 பந்தில் 52 ரன் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
ஆனால், அரைசதம் அடித்த சில நிமிடங்களிலேயே ரன் அவுட் ஆனார். இது பல்வேறு சர்ச்சையான கருத்துகளுக்கும் வழிவகுத்தது. கேப்டன் கவுர் களத்தில் இருந்திருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கும் என்றும், இந்தியா வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு இருந்ததாகவும் கருத்து சிலர் தெரிவித்திருந்தனர். மேலும், இந்தியாவின் ஃபீல்டிங் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். இப்படியான கருத்துகளில், இந்திய அணியின் திறமையான ஆட்டத்தை கேலி செய்யும் விதமாக அமைந்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனின் வர்ணனையில் பேசியுள்ளார்.
ஹர்மன்ப்ரீத் கவுர் ரன் அவுட்:
ஹர்மன்ப்ரீத் கவுர் பந்தை அடித்துவிட்டு ரன் எடுக்க முயன்ற போது, அவரின் பேட் ஸ்ட்ரக் ஆகிவிட்டது. உடல்நிலை சரியில்லாத நிலையில் நேற்றைய போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் விளையாடுவாரா? என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், கவுர் தனக்கு உடல்நலம் நன்றாக இருப்பதால் அணியில் இடம்பெற்றார். கவுர் இன்னும் வேகமாக ஓடியிருக்கலாம் என்றோ அல்லது அவர் ரன் எடுப்பதற்கு முயற்சி செய்யாமல் இருந்திருக்கலாம் என்று கருத்துகள் ஒருபுறம் இருக்கட்டும். ஆனால், இந்திய அணி நேற்றைய போட்டியில் ஒட்டுமொத்தமாக சிறப்பானதொரு விளையாட்டைத்தான் வெளிப்படுத்தினர்.
நாசர் ஹூசைன் சர்ச்சை வர்ணனை:
ஹர்மன்ப்ரீத் கவுரின் விக்கெட் ஆட்டத்தின் போக்கை மாற்றிவிட்டார் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். இந்தப் போட்டியில் வர்ணனையாளராக இருந்த முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹூசைன் “ ஹர்மன்ப்ரீத் கவுரின் அவுட் பள்ளி சிறுமி தவறு செயத்தை போல உள்ளது.” என்று குறிப்பிட்டிருந்தார். ஆட்டத்தின் நடுவே இப்படி சொன்னது இந்திய அணி ஓர் பலமான அணியில்லை என்பதுபோன்ற அவரின் பேச்சு இருந்ததாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஹர்மன்ப்ரீத் கவுர் பதிலடி:
நாசர் ஹூசைனின் பேச்சு தொடர்பாக போட்டி முடிந்த பிறகான நிகழ்ச்சியில் ஹர்மன்ப்ரீத் கவுரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கவுர், “நாசர் ஹூசைன் ஏன் இப்படி சொன்னார் என்று தெரியவில்லை. அது அவருடைய கருத்து. ஆனால், இதுபோன்ற நிகழ்வுகள் கிரிக்கெட்டில் நடப்பதை தவிர்க்க முடியாது. பேட்டர்கள் பலரும் இப்படியான நிகழ்வுகளை கடந்து வந்திருப்பார்கள். ரன் எடுக்கும்போது பேட் தரையில் மாட்டிக்கொள்வது நிகழ்ந்திருக்கிறது. அப்படியிருக்கையில், இதை சிறுவர்கள் விளையாடும் போக்கு என்று குறிப்பிட முடியாது.
இருப்பினும், நாங்கள் சில இடங்களில் எங்களை மேம்படுத்திகொள்ள வேண்டிய அவசியம் இருப்பதையும் உணர்கிறேம். நான் அவுட் ஆனது துர்திஷ்டவசமானது. கிரிக்கெட் போட்டியில் வெல்ல வேண்டும் என்றால் பவுலிங், ஃபீல்டிங், பேட்டிங் என எல்லா துறையிலும் சிறப்பாக செயல்பட வேண்டும். ஏதாவது ஒன்றில் சற்று சறுக்கினாலும் வெற்றி கிடைப்பது கடினம். ஆனால், இதை பள்ளிசிறுவர்கள் போல, கல்லி கிரிக்கெட் போன்று என்று சொல்வதை ஏற்றுகொள்ள மாட்டேன். நாங்கள் சர்வதேச அளவில் கிரிக்கெட் விளையாடும் அணி. நாசர் ஹூசைன் சொல்லியவை அவரின் சிந்தனை.” என்று பதிலளித்துள்ளார்.