புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக உமா மகேஸ்வரி இருந்தார். அவர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக நியமனம் செய்யப்பட்டார். இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக கவிதா ராமு கடந்த ஜூன் மாதம் நியமிக்கப்பட்டார்.
மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற பின்பு புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தினை கவிதா ராமு சிறப்பாக வழிநடத்தி செல்வதாக அரசு அதிகாரிகளும், புதுக்கோட்டை மாவட்ட மக்களும் தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமின்றி அணுகுவதற்கு கவிதா ராமு மிகவும் எளிதாக இருக்கிறார் எனவும், திறமை உள்ளவர்களை அவர் மிகவும் ஊக்கப்படுத்துவதாகவும் மக்கள் கூறுகின்றனர். கவிதா ராமு ஒரு பரதநாட்டிய கலைஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர் ஒருவர் கவிதா ராமுவிடம் பாடல் பாடி காண்பிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் உலா வருகிறது.
அந்த வீடியோவில் நாட்டுப்புற பாடலான ”ஆத்தா உன் சேலை” என்ற பாடலை பாடுகிறார். இந்த ஆத்தா உன் சேலை பாடலானது சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ் மற்றும் அவரது மனைவியான ராஜலட்சுமி ஆகியோர் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பாடும் புகழ் பெற்ற பாடலாகும்.
தற்போது அந்தப் பாடலை சிறுவன் பாடும் வீடியோ வைரலாகியுள்ளது. மேலும் அந்தப் பாடலை மன்னார்குடி சட்டப்பேரவைத் தொகுதி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி ராஜாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: ”நான்தான் மேல் வீட்டு மேகனா பேசுறேன்.. யார் ராஜ் மோகனா?” இது சின்னத்திரை கலாட்டா..
IND vs NZ TEST DAY 4 LIVE: இந்திய அணி தேநீர் இடைவேளை வரை 167/7... 216 ரன்கள் முன்னிலை..!
பாலியல் புகாரா? உடனடியாக சொல்ல வாட்ஸ் அப் எண்.! கரூரில் உருவான 'நிமிர்ந்து நில் துணிந்து செல்!