IND vs NZ TEST DAY 4 LIVE: முதல் விக்கெட்டை இழந்தது நியூசிலாந்து...!

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டின் அப்டேட்களை உடனுக்குடன் கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 28 Nov 2021 04:31 PM
நியூசிலாந்து அணி சறுக்கலுடன் தொடக்கம்...!

இந்தியாவிற்கு எதிராக 284 ரன்கள் இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 4ம் நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட்டுகளை இழந்து 4 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. டாம் லாதம் 2 ரன்களுடனும், வில்லியம் சோமர்வில்லே 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

முதல் விக்கெட்டை இழந்தது நியூசிலாந்து...!

284 ரன்கள் இலக்கை நோக்கி ஆடி வரும் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் வில்யங் அஸ்வின் பந்தில் எல்.பி.டபுள்யூ ஆகி 2 ரன்களில் வெளியேறினார். 

நியூசிலாந்து அணிக்கு 284 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது இந்தியா...!

நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 81 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்களுக்கு டிக்ளேர் செய்துள்ளது. சஹா 61 ரன்களுடனும், அக்‌ஷர் படேல் 28 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து அணிக்கு 284 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நெருக்கடியான நேரத்தில் சஹா அரைசதம்....!

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் விருத்திமான் சஹா மிகவும் நெருக்கடியான நேரத்தில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். அவர் 116 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 51 ரன்களை கடந்து ஆடி வருகிறார். 

நெருக்கடியான நேரத்தில் சஹா அரைசதம்....!

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் விருத்திமான் சஹா மிகவும் நெருக்கடியான நேரத்தில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். அவர் 116 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 51 ரன்களை கடந்து ஆடி வருகிறார். 

விருத்திமான் சஹா - அக்‌ஷர் படேல் சிறப்பான ஆட்டம்...!

நியூசிலாந்து அணிக்கு சவாலான இலக்கை நிர்ணயிக்க போராடி வரும் இந்திய அணியின் விருத்திமான் சஹா மற்றும் அக்‌ஷர் படேல் கூட்டணியால் இலக்கு 250 ரன்களை கடந்துள்ளது. தொடர்ந்து இந்திய அணி ஆடி வருகிறது.

சவாலான இலக்கை நிர்ணயிக்க இந்தியா போராட்டம்..! கைகொடுப்பாரா சஹா..!

நியூசிலாந்து அணிக்கு எதிராக இரண்டாவது இன்னிங்சில் ஆடிவரும் இந்தியா தற்போது வரை 7 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை எடுத்துள்ளது. சஹா 34 ரன்களுடனும், அக்‌ஷர் படேல் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

இந்திய அணி தேநீர் இடைவேளை வரை 167/7

இந்திய அணி தேநீர் இடைவேளை வரை 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து 216 ரன்கள் முன்னிலையில் உள்ளது. நன்றாக விளையாடி வந்த ஸ்ரேயாஸ் ஐயர் சற்றுமுன் 65 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஜேமிசன் பந்துவீச்சில் அஸ்வின் போல்ட்

இந்தியா ஆறாவது விக்கெட்டை இழந்தது. நன்றாக விளையாடி வந்த அஸ்வின் ஜேமிசன் பந்துவீச்சில் போல்ட் ஆனார். அவர் 32 ரன்கள் எடுத்தார். 

இந்தியா உணவு இடைவேளை வரை 84/5 - களத்தில் அஸ்வின், ஸ்ரேயாஸ் ஐயர்..!

நான்காம் நாள் ஆட்டத்தில் தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வரும், இந்திய அணி உணவு இடைவேளை 5 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்து 133 ரன்களுடன் முன்னிலையில் உள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் 18, அஸ்வின் 20 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

ஜடேஜா காலி - அஸ்வின் எண்ட்ரி

நியூசிலாந்து பந்துவீச்சில் திணரும் இந்திய அணி 5ஆவது விக்கெட்டை இழந்தது. செளதி பந்துவீச்சில் ஜடேஜா ஆட்டமிழந்தார். இந்திய அணி 100 ரன்களுடன் முன்னிலையில் உள்ளது. 

இந்தியா 3ஆவது விக்கெட்டை இழந்தது - வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பிய ரஹானே

நியூசிலாந்து அணிக்கு எதிராக தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வரும் இந்தியா மூன்றாவது விக்கெட்டை இழந்தது. ரஹானே அஜாஸ் பட்டேல் பந்தில் 4 ரன்னில் ஆட்டமிழந்தார்.

புஜாரா ஆட்டமிழந்தார்

தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி ஆடி வரும் இந்திய அணியில் புஜாரா ஆட்டமிழந்தார். 22 ரன்னில் ஜேமிஷன் பந்துவீச்சில் தனது விக்கெட்ட பறிகொடுத்தார். ஸ்கோர் விவரம் - 32/2

Background

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி 345 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதை தொடர்ந்து, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 296 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தடு.  இதையடுத்து, தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 14 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில்,  63 ரன்கள் முன்னிலையுடன்  நான்காவது நாளான இன்று இந்திய அணி ஆட்டத்தை தொடங்கி  ஆடி வருகிறது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.