CHN Corp. Super Plan: மாடுகளுக்கு மைக்ரோ சிப்... நவீன மாட்டு கொட்டகை... சென்னை மாநகராட்சியின் செம்ம பிளான்...
சென்னையில், முக்கிய சாலைகளில் மாடுகள் திரிவதை தடுக்க, மாநகராட்சி செம்ம பிளான் ஒண்ணு போட்டுருக்கு. அது என்னன்னு பார்க்கலாம்.

சென்னை வாசிகளின் முக்கிய பிரச்னைகளில் ஒன்று, முக்கிய சாலைகளில் மாடுகள் திரிவது. இந்த பிரச்னைய தீர்க்க, சென்னை மாநகராட்சி ஒரு சூப்பரான திட்டத்த போட்டுருக்காங்க. இன்னைக்கு(30.01.25) நடந்த மாமன்ற கூட்டத்துல, அதுக்கான தீர்மானத்த நிறைவேத்தி இருக்காங்க.
கால்நடைகளுக்கு மைக்ரோ சிப் பொருத்த முடிவு
சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டதில், புதிய மாமன்ற கூடம் கட்டுவதற்கான ஒப்புதல் பெறுவது உள்ளிட்ட 96 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் முக்கியமாக, சென்னை மாடுகள், செல்லப் பிராணிகளுக்கு மைக்ரோ சிப் பொருத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அரசு மற்றும் தனியார் கால்நடை மருத்துவமனைகளுக்கு வரும் கால்நடைகள், செல்லப் பிராணிகளுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்பட உள்ளது.
மாநகராட்சி பகுதிகளில் நவீன மாட்டுக்கொட்டகை
சென்னை வாகன ஓட்டிகளின் ஒரு முக்கியமான பிரச்னையாக இருப்பது, முக்கியமான, போக்குவரத்துமிக்க சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிவது. இந்த பிரச்னையை போக்க, மாமன்ற கூட்டத்தில் ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சி பகுதிகளில் நவீன மாட்டுக்கொட்டகைகள் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக மண்டலம் 5-ல் பேசின் பாலம் சாலையில், 7,700 சதுர அடியில், 100 மாடுகள் தங்கும் அளவிற்கு நவீன மாட்டுக் கொட்டகை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் மாடுகளை கட்டுவதற்கு நாள் ஒன்றிற்கு 10 ரூபாய் வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாட்டுக் கொட்டகை அமைப்பதில், சென்னை மாநகராட்சி, மாடுகளின் உரிமையாளர்கள், கால்நடை வளர்ப்போர் சங்கங்களின் பங்களிப்பும், பொறுப்புகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.