திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியராக தனுஷ்கோடி என்பவர் பணிபுரிந்தார். முதல் மனைவி உயிருடன் இருந்தபோதே, இரண்டாவதாக சாந்தி  என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தனுஷ்கோடி மரணமடைந்தார். 


வழக்கு:


ஆசிரியர் தனுஷ்கோடி உயிரிழந்த நிலையில், இரண்டாவது மனைவி சாந்திக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் தனக்கு, குடும்ப ஓய்வூதியம் வழங்க கோரி இரண்டாவது மனைவி சாந்தி வழக்கு தொடர்ந்தார்.

தீர்ப்பு:


குடும்ப ஓய்வூதியம் தொடர்பாக வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது அரசு ஊழியர் ஒருவர் இரண்டாவது திருமணம் செய்வது தவறானது. எனவே இரண்டாவது திருமணம் செல்லத்தக்கதல்ல. அதனால் ஓய்வூதியம் கோர மனுதாரருக்கு உரிமையில்லை என தீர்ப்பளித்தது. மேலும் தமிழ்நாடு அரசின் உத்தரவு சரியே என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.


Also Read: Nupur Sharma: முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்து: நுபுர் சர்மாவை கைது செய்ய இடைக்காலத் தடை


Also Read: Kallakurichi issue: கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஸ்ரீதர், எஸ்.பி செல்வகுமார் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு