கைது செய்ய தடை:


முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த முன்னாள் பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவை கைது செய்ய இடைக்கால தடையை உச்சநீதிமன்றம் விதித்துள்ளது.






வழக்கு:


தன்னை கைது செய்ய தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் நுபுர் சர்மா வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நுபுர் சர்மாவை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், நுபுர் சர்மாவுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்துள்ள மாநிலங்கள் பதிலளிக்குமாறு கூறி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சர்ச்சை கருத்து:


முகமது நபி குறித்த முன்னாள் பாஜக செய்தி தொடர்பாளர்களின் சர்ச்சைக்குரிய கருத்து உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக உலகத்தில் உள்ள பல்வேறு நாடுகள் கண்டனங்களை தெரிவித்தன. மேலும் பல்வேறு கட்சிகளை சார்ந்த தலைவர்களும் நுபர் சர்மாவுக்கு கண்டனம் தெரிவித்தன.


இஸ்லாமியர்களின் மத உணர்வை புண்படுத்தியதாக, நுபுர் சர்மாவுக்கு எதிராக மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்தும் வழக்கு தொடுக்கப்பட்டது.


இந்நிலையில் தன்னை கைது செய்ய விதிக்க வேண்டும் என நுபர் சர்மாவின் மனு , உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அதை தொடர்ந்து நுபுர் சர்மாவை கைது செய்ய இடைக்கால தடை விதித்து, வழக்கை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.