மதுரை விக்கரமங்கலம் முத்துப்பாண்டி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில்,  "மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள கல்புளிச்சான்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் மந்தை அம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா  சிறப்பாக நடைபெறும். பங்குனி பொங்கல்  திருவிழாவின் போது ஆண்டுதோறும் கிடாமுட்டு மற்றும் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள்  நடைபெறும்.இந்த நிலையில் இந்த விழாவிற்கு அனுமதி கேட்டு மனு செய்திருந்தோம்.  ஆனால் விக்கிலமங்கலம் போலீசார் அனுமதி மறுத்தனர்.

 

எனவே, விக்கிரமங்கலம் அருகே உள்ள கல்புளிச்சாம்பட்டி  கிராமத்தில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு  வருகிற ஏப்ரல் 10 ஆம் தேதி  கிடாமுட்டு நடத்த  அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பரேஷ்  உபாத்யாய், விஜயகுமார் அமர்வு, உரிய விதிமுறைகள் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து கிடாமுட்டு விழா நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

 



 

நாகர்கோவில் மாநகராட்சியில் கடை வாடகை ரத்து செல்லும் - மதுரை உயர்நீதிமன்றம் 










கொரோனா ஊரடங்கு காரணமாக நாகர்கோயில் மாநகராட்சி கடைகளில் 2020 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி முதல் 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 06 ஆம் தேதி வரையிலான வாடகையை ரத்து செய்ய வேண்டும் என தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்ததார். ஆனால், தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கான வாடகைக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  இந்த அரசாணையின்படி நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் மீதமுள்ள மாதங்களுக்கு வாடகை செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். 




எனவே, 2020 ஆம் ஆண்டு மார்ச் 23 தேதி  முதல் 2020ஆம் ஆண்டு செப்டம்பர் 06 ஆம் தேதி வரை வாடகை ரத்து செய்ய வேண்டுமென தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என நாகர்கோவில் மாநகராட்சி சார்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கொரோனா ஊரடங்கு காரணமாக நாடே பல இன்னல்களை சந்தித்து வந்தது.நாடு முழுவதும் யாரும் வெளியே வர முடியாத சூழ்நிலை இருந்து வந்தது. இந்த காலகட்டத்தில் மக்கள் பணம் சம்பாதிக்க மற்றும் வெளியே செல்ல முடியாத நிலை இருந்தது. இதுபோன்ற நேரத்தில் அரசே மக்களை காப்பாற்ற வேண்டும் தவறும் பட்சத்தில் நீதிமன்றம் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க உரிமை உள்ளது. என கூறி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதிசெய்தும், நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.