தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்த்தப்பட்டது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட தகவலில், தமிழ்நாட்டில் 100 சதவீதம் முதல் 150 சதவீத சொத்து வரி 7 % சதவீத வீடுகளுக்கு மட்டுமே. ஏழை மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சொத்து வரி உயர்த்தப்பட்டது. என்றார்.
மேலும், நாட்டின் பல நகரங்களுடன் ஒப்பிடுகையில் சென்னையில் சொத்து வரி குறைவுதான் என்றும், சென்னையில் நிலத்தின் மதிப்பை கணக்கிட்டுதான் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் சொத்து வரியை அதிகரித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இந்த உயர்வு 2022-23ஆம் ஆண்டிற்கான முதலாம் அரையாண்டு முதல் அமலுக்கு வர உள்ளது.
அதன்படி, 600 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 25 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. 601 முதல் 1,200 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. 1,201 முதல் 1,800 சதுர அடி வரை 75 சதவீதமும், 1,800 சதுர அடிக்கு அதிகமான கட்டிடங்களுக்கு 100 சதவீதமும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது உள்ள சொத்து வரியில், வணிக பயன்பாட்டு கட்டிடங்களுக்கு 100 சதவீதமும், தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய பயன்பாட்டு கட்டிடங்களுக்கு 75 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு விளக்கம்
அதேபோல தற்போது, தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் நடைமுறையில் உள்ள சொத்து வரியானது, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநகரங்கள் மற்றும் நகரங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாக உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்