முதலமைச்சர் ஸ்டாலின் அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக ஓசூர் சென்றார். விமான நிலையத்தில் இருந்து தன்னுடைய காரில் சென்ற முதலமைச்சர் ஸ்டாலினை காண பொதுமக்கள் சாலையோரம் காத்திருந்தனர். பொதுமக்களை பார்த்து கையசைத்தப்படி காரில் சென்றுகொண்டிருந்தார். இது கொரோனா காலம் என்பதால் முகக்கவசம் அணிந்து தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் முதலமைச்சர் சென்றார். அப்போது சாலையோரம் நின்றிருந்த மக்களை கண்டதும் காரை மெதுவாக நிறுத்தி அங்கிருந்தவர்களை அழைத்தார். 




அப்போது அங்கே நின்றுகொண்டிருந்த ரம்யா என்ற பெண் முகக்கவசத்தை கழட்டும்படி சொல்லி முகத்தை பார்க்க வேண்டும் என ஆசையாக இருப்பதாகவும் தெரிவித்தார். இனி நாங்கள் எப்போது பார்க்க முடியுமோ? என்றும் அவர் முதலமைச்சரிடம் அன்பு கோரிக்கை விடுத்தார். அந்த பெண்ணின் கோரிக்கையை புன்முறுவலுடன் ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், முகக்கவசத்தை கழட்டி அவரது முகத்தை காட்டினார்.


தன்னுடைய கோரிக்கை நிறைவேறியதால் மகிழ்ச்சி அடைந்த அப்பெண் நன்றி தெரிவித்து, விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்றும்,அதற்கு பெயர் ஸ்டாலின் என்றும் தெரிவித்தார். அவர்களுக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின் காரில் புறப்பட்டுச்சென்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.