வன்னியர் உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 


தமிழ்நாட்டில் அமலில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டிற்கான 20 சதவீதத்தில் வன்னியர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை ரத்து செய்வதாக மதுரை உயர்நீதிமன்ற கிளை பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.


இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வு,


1. உள் இடஒதுக்கீடு வழங்க அரசுக்கு அதிகாரம் உள்ளதா?? 
2.சாதி அடிப்படையில் உள் இடஒதுக்கீடு வழங்க முடியுமா?
3. முறையான வரையறுக்கப்பட்ட புள்ளி விபரங்கள் இல்லாமல் இது போல உள் இடஒதுக்கீட்டை வழங்க முடியுமா?
உள்ளிட்ட 7 கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், அரசு அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை எனக்கூறி உள் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான  அனைத்து மனுக்களையும் அனுமதித்து, 10.5% இட ஒதுக்கீடு வழங்கியது செல்லாது எனக்கூறி 10.5% உள் இட ஒதுக்கீட்டு சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.


தொடர்ந்து இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இடம் கிடைத்த மாணவர்களின் கல்வி இந்த தீர்ப்பால் பாதிக்கப்படும் என்பதால் மேல்முறையீடு செல்லும் வகையில், தீர்ப்பை சில வாரங்கள் நிறுத்திவைக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கபட்டது. அதனை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.


இந்த நிலையில், வன்னியர் உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் கெவின் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.


முன்னதாக, இந்த தீர்ப்பை எதிர்த்து வடதமிழ்நாட்டின் பல இடங்களில் பாமகவினர் சாலை மறியலில் ஈடுபட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மரக்காணம் ஈசிஆர் சாலையில் வாகனங்களை மறித்து போராட்டம் செய்ததால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினார்கள். 



 “வன்னியர் உள் இட ஒதுக்கீட்டு சட்டம் ரத்து பெரும் ஏமாற்றம் என்றும், சமூக நீதியை மீட்க அனைத்து சட்ட அரசியல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டிய கடமையும், பொறுப்பும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உண்டு” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருந்தார்.


 






மேலும், வன்னியர் இடஒதுக்கீட்டை ரத்து செய்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதை வரவேற்பதாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண