ஒருவர் இறந்த பிறகு அவருக்கு நாம் செய்யும் கடைசி மரியாதை அவர்கள் வாழ்ந்த முறையை பிறருக்கு பறைசாற்றும் வகையில் இருக்கும். அப்படி ஒரு நபர் தன்னுடைய நண்பர்களிடம் ஒரு முறை நான் இறந்தால் எனக்கு நீங்க எப்படி இறுதி மரியாதை செய்யவேண்டும் என்று தெரிவித்துள்ளார். அவர் கூறியதை அப்போது கேட்ட நண்பர்கள் உண்மையில் நபர் இறந்தவுடன் செய்துள்ளனர். அந்த நபர் தன்னுடைய நண்பர்களிடம் நான் இறந்த பிறகு என்னை நீங்கள் இளையராஜா பாடல் பாடி வழி அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார். இதை அப்போது அவருடைய நண்பர்கள் சற்று சிரிப்புடன் ரசித்துள்ளனர். ஆனால் சமீபத்தில் அந்த நபர் உயிரிழந்தவுடன் அவருடைய நண்பர்கள் தன் நண்பனின் கடைசி ஆசையை நிறைவேற்றி உள்ளனர்.

  


 



 


இந்த விஷயம் தொடர்பாக ஒருவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை செய்துள்ளார். அதில், "இசைஞானி இளையராஜாவின் பாடலோடு send off கேட்ட நண்பனுக்கு, நண்பர்களின் இறுதி மரியாதை...!" எனப் பதிவிட்டுள்ளார். மேலும் அந்தப் பதிவில் நண்பர்கள் அனைவரும் துக்கத்துடன் இருந்தாலும் தன்னுடைய நண்பனின் கடைசி ஆசையை நிறைவேற்ற இளையராஜாவின் பாடலை பாடியுள்ளனர். இதை பார்க்கும் போது ஒரு புறம் சோகம் இருந்தாலும் மறுபுறம் தன்னுடைய நண்பனின் கடைசி ஆசையை இறந்த தருவாயிலும் நிறைவேற்றி நண்பர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.