CM Stalin : சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.


தீரன் சின்னமலை


சுதந்திர போராட்டக்காரர்களில் ஒருவர்தான் தீரன் சின்னமலை. ஈரோடு மாவட்டம் காங்கேயம் அருகே மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர் தீரன் சின்னமலை. இவரது இயற்பெயர் தீர்த்தகரி. தனது இளம் வயதிலேயே வாள் பயிற்சி, வில் பயிற்சி,சில்பாட்டம் என அனைத்தையும் கற்றுத் தேர்ந்தவர் தீரன் சின்னமலை. ஆங்கிலேயர்களிடம்  இருந்து இந்தியாவை மீட்பதற்காக போராடிய வீரர்களில் இவரும் ஒருவர். குறிப்பாக மைசூர் மன்னன் திப்பு சூல்தானுடன் தன்னை இணைத்து கொண்டு இந்தியாவை ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்து மீட்க பாடுபட்டார்.


ஆங்கிலேயருக்கு எதிராக மைசூரில் நடைபெற்ற மூன்று போர்களில் தீரன் சின்னமலை மற்றும் திப்பு சூல்தான் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை கண்டது. பல போர்களில் தோல்வி அடைந்த ஆத்திரத்தில் ஆங்கிலேயர்கள் தீரன் சின்னமலை மற்றும் அவரது  சகோதரர்களையும் கைது செய்து சங்ககிரிக் கோட்டையில் 1805ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி தூக்கிலிட்டனர்.


முதலமைச்சர் மரியாதை


இப்படிப்பட்ட சிறந்த வீரனின் 267வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சுதந்திரப் போராட்ட வீரரான தீரன் சின்னமலைக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.  அதன்படி, இன்று தீரன் சின்னமலையில் 267வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.  சென்னை கிண்டியில் உள்ள அவரின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை  அணிவித்து மரியாதை செலுத்தினார்.




மேலும், அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, முத்துசாமி, சாமிநாதன், சக்கரபாணி, பொன்முடி ஆகியோரும் தீரன் சின்னமலையின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ச்சியாக சென்னை மாநகராட்சியின் மேயம் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோரும் மரியாதை செலுத்தினர். 


இவர்களை தொடர்ந்து அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி தீரன் சின்னமலையின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். இதற்கிடையில், கிண்டி பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், அப்பகுதி முழுவதும் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.




மேலும் படிக்க


Karnataka Election: காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் பாஜக முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் சட்டர்: கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு..!