கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், அந்த மாநில பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவருமானவர் ஜெகதீஷ் ஷட்டர். இவருக்கு அடுத்த மாதம் நடைபெற உள்ள மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிட கட்சித்தலைமை வாய்ப்பு மறுத்தது. இதையடுத்து, கட்சித் தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்த ஜெகதீஷ்ஷட்டர் நேற்று பா.ஜ.க.வில் இருந்து விலகினார்.


ஜெகதீஷ் சட்டர்:


இந்த நிலையில், இவர் பெங்களூரில் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை அவர் கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் அம்மாநில முக்கிய தலைவருமான சித்தராமையாவை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது. பா.ஜ.க.விற்காக ஆறு முறை எம்.எல்.ஏ.வாக பொறுப்பு வகித்த ஜெகதீஷ் சட்டர், வரும் மே மாதம் 10-ந் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதலில் வெளியிட்ட 2 கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை.


மேலும், இளைஞர்களுக்கு வழிவிடுங்கள் என்ற அறிவுறுத்தலுடன் ஜெகதீஷ் சட்டருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்க பா.ஜ.க. மறுத்தது. இது அவருக்கும், அவரது ஆதரவாளர்ளுக்கும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஜெகதீஷ் சட்டர் கர்நாடக மாநிலத்தின் பா.ஜ.க. ஆட்சிக்கு முதலமைச்சராக பொறுப்பு வகித்தவர்.


காங்கிரசில் இணைந்தார்:


இந்த நிலையில், டெல்லி சென்ற ஜெகதீஷ்சட்டர் பா.ஜ.க. முக்கிய தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், நேற்று அவர் பா.ஜ.க.வில் இருந்து விலகினார். பா.ஜ.க.வில் இருந்து விலகிய மறுநாளே அவர் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனே கார்கே, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் இன்று பெங்களூரில் காங்கிரஸ் முன்பு இணைந்தார்.


காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் சட்டருக்கு அவரது ஆஸ்தான தொகுதியாஜ ஹூப்ளியிலே வரும் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் வாய்ப்பு வழங்கப்படும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பா.ஜ.க.விற்கு பின்னடைவு:


இந்த விவகாரம் தொடர்பாக ஜெகதீஷ்சட்டர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “ நான் அவமானப்படுத்தப்பட்டதுடன் மிகவும் மோசமாக பா.ஜ.க. தலைவர்களால் நடத்தப்பட்டேன். இந்த மாநிலத்தில் உள்ள சில தலைவர்கள் பா.ஜ.க.வை தவறாக பயன்படுத்துகின்றனர். இது வேதனையானது” என்றார்.


கர்நாடக முதலமைச்சர், கர்நாடக சட்டமன்ற தலைவர், எம்.எல்.ஏ. என்று முக்கிய பொறுப்புகளை வகித்ததுடன் பா.ஜ.க.வின் பெரும்பலமான இருந்த ஜெகதீஷ்சட்டர் தேர்தலுக்கு இன்னும் 23 நாட்களே உள்ள நிலையில் முக்கிய தலைவர் ஜெகதீஷ்சட்டர் காங்கிரசில் இணைந்திருப்பது பா.ஜ.க.விற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க: Maharashtra Public Death: அமித் ஷா பங்கேற்ற நிகழ்ச்சி.. வெயிலில் சுருண்டு விழுந்து 11 பேர் மரணம்.. மகாராஷ்டிராவில் பரிதாபம்


மேலும் படிக்க: Crime: கார் பேனட்டில் தொங்கிய போக்குவரத்து காவலர்..! 19 கி.மீ. தொலைவிற்கு இழுத்துச்சென்ற இளைஞர்..! நடந்தது என்ன?