இந்தியாவின் முன்னணி ஊடக நிறுவனமாக இருப்பது ஏபிபி நெட்வொர்க். அதன் தமிழ் செய்தி தளமான ஏபிபி நாடு இன்று மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.


இதற்கு பல்வேறு தலைவர்கள், தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "ஏபிபி நாடு ஊடகம், இரண்டாம் ஆண்டிலிருந்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த தருணத்தில் ஏபிபி நாடு ஊடகத்தை நான் மனமாற வாழ்த்துகிறேன். 


அதுமட்டுமல்ல, நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற அடிப்படையில் கடந்த இரண்டு ஆண்டு காலம் பல்வேறு வகைகளில் மக்கள் பிரச்னைகளை சமூக ஊடகம் மூலம் அதேபோன்று பல்வேறு வகைகளில் அதை எடுத்து சென்று ஏபிபி நாடு திறம்பட கையாண்டு இருக்கிறது. 



இதை நல்ல விஷயமாக கருதுகிறேன். ஏபிபி நாடை பொறுத்தவரையில் இரண்டாம் ஆண்டில் இருந்து மூன்றாம் ஆண்டு அடியெத்து வைக்கும் சமயத்தில் மேலும் வெள்ளிவிழா பவள விழாவும் காண்பதற்கு நல்வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். 


இரவு என்றும் பகல் என்றும் பாராமல் உழைத்து கொண்டிருக்கும் தொழில்நுட்ப பணியாளர்கள், களத்தில் இருப்பவர்கள், நிர்வாகத்தில் இருப்பவர்கள், அத்தனை பேருக்கும் எனது வாழ்த்துகள். 


குறிப்பாக, ஊடகம் என்றால் ஒரு தராசு போல நியாயம், அந்நியாயம் என இரண்டையும் சீர் தூக்கி பார்த்து மக்கள் மத்தியில் கொண்டு செல்வதுதான் ஊடகத்துடைய நற்பண்புகளாக இருக்கும். அந்த வகையில், ஏபிபி நாடு தங்களுடைய கடமையை சிறப்பாக திறம்பட செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது" என்றார்.