சென்னையில் அமைந்துள்ள பல்நோக்கு அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைய உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு இன்று திறந்து வைக்கவுள்ளார்.


அறிவிப்பு...


ஏப்ரல் 26-ஆம் தேதி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து நினைவுகளை பகிர்ந்துகொண்ட ஸ்டாலின், கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றார். மேலும், “தமிழர்களே, தமிழர்களே நீங்கள் என்னை கடலில் தூக்கி போட்டாலும் கட்டுமரமாகத்தான் மிதப்பேன். அதில் ஏறி பயணம் செய்யலாம் என கூறியவர் கருணாநிதி. நின்ற தேர்தலில் எல்லாம் வென்ற தலைவர் கலைஞர் கருணாநிதி. 




13 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து 60 ஆண்டுகள் சட்டமன்றத்தில் பணியாற்றியவர்.  5 முறை தமிழக முதல்வராக இருந்து 19 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்தவர். இந்தியாவின் குடியரசுத் தலைவர்களாலும், பிரதமர்களாலும் பாராட்டப்பட்டவர் கருணாநிதி. அவருடையை பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும். சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் தோட்டத்தில் கருணாநிதியின் சிலை நிறுவப்படும்” எனத் தெரிவித்தார். அண்ணா சாலையில் பெரியார் மற்றும் அண்ணா சிலைக்கு நடுவே முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை நிறுவப்பட உள்ளது எனக் குறிப்பிட்டார்.


சிலை..


முதல்வரின் அறிவிப்பை அடுத்து ரூ.1.56 கோடி செலவில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின்  சிலை அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்றன. 16 அடியில் வெண்கல சிலையாக இது இருக்குமென்றும், இதுதான் தற்போது இருப்பதிலேயே உயரமான கருணாநிதி சிலையாக இருக்குமென்றும் கூறப்படுகிறது.


அதன்படி அந்த சிலையை திறந்துவைக்க இன்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு சென்னை வரவுள்ளார். இன்று மாலை சிலை திறப்பு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது




ஆய்வு..


இன்று சிலை திறப்பு நடைபெறவுள்ள நிலையில் அதற்கான இறுதிகட்ட பணிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். முதல்வர் ஆய்வின்போது அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு ஆகியோர் உடன் இருந்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண